#Plote #உள்படுகொலை
#காக்கா #என்றழைக்கப்படும் #உடுவில் #சிவனேஸ்வரன்
காக்கா என்றழைக்கப்படும் துரைராஜா சிவனேஸ்வரன் யாழ்மாவட்த்தில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுவில் டச்சு வீதியில 20.08.1961ம் ஆண்டு பிறந்தார் இவருடைய தந்தைக்கு சிவனேஸ்வரன் உட்பட 11 பிள்ளைகள் ,
தனது ஆரம்ப கல்வியை உடுவில் முருக மூர்த்தி வித்திசாலையிலும் உயர்கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரிலும் பயின்றவர் ஸ்கந்தவரோதயாவில் பயின்ற காலத்தில் பாடசாலையின் கிரிக்கெட் அணியிலும் உதைபந்தாட்ட அணியில் கோல் காப்பாளர் பதிவியையும் விகித்தவர்
இவருடைய அக்காவின் கணவர் பபா இவர் டச்சு வீதியில் பபா ஸ்டூடியோ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் .பபா குரும்பசிட்டியை சேர்ந்தவர் அதேவேளை பபா உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமானவர்
பபா மூலம் உமாமகேஸ்வரனும் புலிகள் அமைப்பில் உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் சேர்ந்து செயற்பட்ட காலத்தில் இருவரும் இலங்கை அரசால் தேடப்பட்ட பொழுது உடுவிலில் வைத்து இருவரையும் பாதுகாத்தவர்கள் சிவனேஸ்வரனும் குடும்பத்தினரும்
இவ்விடயம் இராணுவத்திடம் பிடிபட்ட விஜி என்பவர் மூலம் இராணுவம் அறிந்து கொள்ள 80 களின் இறுதியில் உடுவிலை நோக்கி சிவனேஸ்வரனை கைது செய்யும் நோக்குடன் இராணுவ அணி ஒன்று நகர்த்தப்பட்டது .அப்பொழுது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவனேசன் மற்றும் பபா தப்பியோட முற்பட்டவேளை பபா மதில் பாயும் பொழுது பபா சுடப்பட்டு இறந்து விட சிவனேஸ்வரன் தப்பித்துக் கொள்கிறார்.
இதே வேளை ஊர்மிளா விவகாரத்தால் பிரபாகரன் உமாமகேஸ்வரன் பிரிவு நிரத்தரமாகி விட தன்னை plote ல் இணைத்து கொண்டார் சிவனேஸ்வரன்.
மேலும் அமிர்தலிங்கத்தை தனது புதிய பாதை பத்திரிகைகளில் விமர்சித்த போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து 02.01.1982 அன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன்பின்னால்உமாமகேஸ்வரன்,சிவனேஸ்வரன் மற்றும் கண்ணன் ஆகியோர் இந்தியா திரும்பி சென்னையில் தங்கி கொள்கின்றார்கள்.
19..05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகத்துக்கு உமாமகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
சாப்பிட்டு விட்டு வெளியே வந்த இருவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை நெருங்கினர். தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கு நிற்கின்றமையை கவனித்து விட்டார் உமாமகேஸ்வரன்.
தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அவரது இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்று இருந்தார்.ராகவன் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர். பின்னாளில் அந்த இயக்கத்தை விட்டு விலகி புலிகளுக்கு எதிராக பாரிய விமர்சனத்தை முன் வைத்தவர்
பாண்டி பஜாரில் தலைவர் பிரபாகரன் அவர்களை கண்டமையுடன் உஷார் அடைந்தார் உமா மகேஸ்வரன். சூடு நடத்து கின்றமைக்கு தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தீர்மானித்துச் சொந்தத் துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன். கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன் அதே கணத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களும் துப்பாக்கியை உருவினார்.
கைத்துப்பாக்கியால் சுட்டார் பிரபாகரன் அவர்கள். ஆனால் உமா மகேஸ்வரன் காயம் எதுவும் இன்றி தப்பித்துக் கொண்டார். உமா மகேஸ்வரனுடன் வந்திருந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு இரத்தம் வழிந்தது.
சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்து இருந்த மக்களின் கவனம் பிரபாகரன் அவர்கள் மீதும் ராகவன் மீதும் படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர பிரபாகரன் அவர்களும், ராகவனும் பாண்டி பஜாரில் இருந்து வேகமாக மறையத் தொடங்கினார்கள்.
பொதுமக்கள் துரத்திச் செல்ல பாண்டிபஜார் வீதியில் ஓடிய பிரபாகரன் அவர்களை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார். தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர்.
சம்பவ நேரம் பர்மா பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த மாணிக்கம் பொதுமக்களின் துணையுடன் தலைவர் பிரபாகரனன் அவர்களையும் ராகவனையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தகண்ணனைமாம்பலம் பொலிஸ் கைது செய்தது.
இதைவேளை கண்ணன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிவனேஸ்வரன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.உமாமகேஸ்வரன் தப்பி ஒடி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிற்கும் பொழுது தன்னை நோக்கி வந்த பொதுமகனை பொலிஸ் என எண்ணி சுட்டுவிடுகின்றார்.சுடு பட்டநபர் படுகாயமடைந்து விட உமாமகேஸ்வரன் கும்மிடிப்பூண்டி பொலிசாரல் கைது செய்யப்பட்டார்
இதேவேளை நீதிமன்றம் பிரபாகரன் மதுரையிலும் ராகவன் புதுக்கோட்டை உள்ள பொலிஸ் நிலையத்திலும். கண்ணன் ஈரோடு மாவட்டத்தில் பவானியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும் சிவனேஸ்வரன் திருச்சியிலும் பொலிஸ் நிலையத்திலும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
இதேவேளை நீதிமன்றம் நிபந்தனையை தளர்த்த சிவனேஸ்வரன் இரகசிய முகாம் ஒன்றில் plote அமைப்பை சேர்ந்த முக்கிய உறுப்பினகளான வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகியோருடன் தங்கியிருந்தனர்.இதேவேளை கண்ணனும் உமாவும் சென்னையில் தங்கி கொள்கின்றனர்.இரகசிய முகாமில் சிவனேஸ்வரன் சென்னையை அண்டிய plote பயிற்சி முகாம்களுக்கு சென்று பயிற்சி வழங்கி வந்தார் சிவனேஸ்வரன்
ஒருநாள் உமா மகேஸ்வரன் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை அவதானிக்க சிவனேஸ்வரன். இந்தப் பெண்ணையே பின்னாளில் உமாமகேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்
Plote முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் உமா மகேஸ்வரனுடன் குறித்த பெண் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார் சிவனேஸ்வரன். இங்கு தான் ஆரம்பித்து உமா சிவனேஸ்வரன் விரிசல்.மேலும் உமா காக்கா விரிசல் ஆரம்பித்த இடத்தில் இருந்த plote முக்கிய உறுப்பினர் இன்றும் சாட்சியாக இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகின்றது
பிரபாகரன் தப்பி செல்ல இருப்பது என்ற தகவலை அன்றைய மாநில அமைச்சர் காளி முத்து ஊடாக உமாவிற்கு தெரிவிக்கப்பட இவ்யோசனைக்கு குறித்த வழக்கை கையாண்ட N T வானமாமலை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க திட்டத்தை Plote கைவிட பிரபாகரன் தப்பித்துக் ஈழம் திரும்புகிறார்
இதனால் பிணை இரத்து செய்யப்பட்டு உமாமகேஸ்வரன்,கண்ணன்மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் .சிறையிலும் உமா சிவனேஸ்வரன் விரிசல் அதிகரிக்கின்றது
1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் சிறையில் இருந்து உமாமகேஸ்வரனும் கண்ணனும் சிவனேஸ்வனும் விடுதலை செய்யப்பட்டனர்
இந்நிலையில் உமா சிவனேஸ்வரன் விரிசல் நிரந்தரமாகி விட 1985 ம் ஆண்டு ஆரம்பத்தில் சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமியால் விசாரணை என்ற பெயரில் சிவனேஸ்வரன் கைது செய்யப்பட்டு சுழிபுரத்தை சேர்ந்த மொக்கு மூர்த்தி என்பவரின் பொறுப்பில் விசாரணைக்கு ஒப்படைக்கபட்டார் சிவனேஸ்வரன்
கந்தசாமியும் மொக்கு மூர்த்தியும் சுழிபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு கந்தசாமியின் தீவிர விசுவாசி மொக்கு மூர்த்தி
தளுசாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் வைத்து மொக்கு மூர்த்தியால் சித்திரவதை செய்யப்பட்டு சித்திரவதை தாங்காமல் இறந்து விட்டார் சிவனேஸ்வரன்
சிவனேஸ்வரன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த பின்னாளில் தனது தம்பி படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வருகிறார் சிவனேஸ்வரனின் மூத்த அண்ணன் விக்கினேஸ்வரன் சென்னையில் உமாவுடன வாக்கு வாதத்தில் ஈடு பட்டுவிட்டு கடல் வழியாக இலங்கைக்கு திருப்பி கொண்டிருந்தவேளை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு அமையா கொல்லப்படுகின்றார் விக்கினேஸ்வரன்
தமிழ் விடுதலைக்கு தங்களது குடும்பத்தையே அர்பணித்த சிவனேஸ்வரனின் குடும்பம் பின்னாளில் கூடு கலைந்திட்ட குருவிகள் போல் உடுவிலை விட்டுபுலம் பெயர்ந்து விட்டார்கள்
No comments:
Post a Comment