எனது கேள்விக்கு விபரம் அறிந்தவர்கள் மட்டும் கருத்துக்களை போடவும்..
நவாலி தேவாலய தாக்குதல் படுகொலைகள், செம்மணி உட்பட பல தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர் படுகொலையை தடுத்து நிறுத்தாதவர் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமார் தூங்க .
சந்திரிகாவை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் கருணா அம்மான் விடுதலை புலிகளை விட்டு பிரிந்த பின்பு , கிழக்கு மாகாண விடுதலை புலிகள் அமைப்பை களையெடுத்து புனரமைக்க, யுத்த நிறுத்த காலத்தில் ஆயுதங்களுடன் நூற்றுக்கணக்கான வன்னி விடுதலைப் புலிகள் கிழக்கு மானத்தை நோக்கி செல்லும்போது அவர்களுக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. கடல் வழியாகவும் இலங்கை கடற்படை உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு கிழக்கு மாகாணத்தில் இருந்து நார்வே கண்காணிப்பு குழுவினரையும் இலங்கை ஜனாதிபதி அப்புறப்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன.
அதன் பிறகு தான் வெருகல் தாக்குதல் நடந்து பல நூற்றுக்கணக்கான சகோதர விடுதலைப்புலிகள் சொந்த சகோதரர்களாகவே கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன.
ஆயுதங்களுடன் விடுதலை புலிகள் நடமாட ஜனாதிபதி சந்திரிகா தானாக வந்து உதவி செய்தாரா? அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பு கேட்டுக் கொண்டதற்காக உதவி செய்தாரா.
இது பற்றி பல முகநூல் நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்குரிய பதில் எனக்கு தெரியாது. இதில் நேரடியாக ஈடுபட்ட பாதிக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் இது பற்றி சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment