பிளாட் இயக்கத்தில் நடந்த மிக முக்கிய தலைவர்களின் உட்கொலைகள் பற்றிய செய்திகள் மறைக்கப்பட்ட வந்தது பலவித கற்பனை கதைகளும் கொலை செய்யப்பட்ட விதங்களும் ஒவ்வொருத்தரும் தங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதி வந்தார்கள். இக்கொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட அண்மையில் இறந்த வாமதேவன் தனது நண்பரின் மூலம் தான் இறந்த பிறகு வெளியிடக் கூறி சில வீடியோக்களை கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அதில் தனக்கு நேரடி சம்பந்தம் இருப்பதை மறைத்து உண்மைகளை கூறியுள்ளார்.
இது சம்பந்தப்பட்ட நாலு வீடியோக்கள் எனக்கு கிடைத்தது அதை நான் முகநூலில் பகிர்ந்தேன். இன்னும் சில வீடியோக்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன் அவை கிடைத்தவுடன் போடுவேன். முக்கிய கொலைகளில் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை வாம தேவன் கூறியிருப்பாரோ என்ற பயத்தில் எனக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரியாதவர்கள் எல்லாம் மிரட்டலும் கெஞ்சியும் பார்த்தார்கள் வாமதேவன் கூறிய வீடியோக்களை முகநூலில் இருந்து அப்புறப்படுத்தும் படி, எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கூட கூறி போடவேண்டாம் என்றார்கள்.
இப்போது லண்டனில் வசிக்கும் தேசம் நெட், ஜெயபாலன் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வாமதேவன் உட்பட பலரை போதை மருந்து கடத்துவதற்காக எனது பொறுப்பில் இருந்ததாக போகும்போது சொல்லியிருக்கிறார். இயக்கம் ஒருபோதும் போதை மருந்து கடத்தவில்லை. அதன் தலைவர் உமா மகேஸ்வரன் தனிப்பட்ட முறையில் பம்பாயில் வாமதேவனை வைத்து போதை மருந்து கடத்தியது உண்மை. இது சம்பந்தமாக பல வருடங்களுக்கு முன்பு நான் போட்ட எனது பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
இனி விடயத்துக்கு வருகிறேன் ஜெயப்பாலன் என்னை குறி வைப்பது எனது பதிவுகள் போடும்போது ஏற்பட்ட மனக்கசப்பு. தனது சகோதரன் வசந்த் பற்றிய உண்மைகளை எழுத வேண்டாம் இப்பொழுது மக்கள் மத்தியில் தான் ஒரு படித்த பெருமைமிக்க குடும்பத்திலிருந்து வந்த ஒரு அறிவு ஜீவி என்று நினைக்கிறார்கள். நீங்கள் எனது அண்ணாவை பற்றி எழுதினால் தான் பெரும் சங்கடங்களை சந்திக்க வேண்டும். என்று கூறினார். ஆனால் அவரின் அண்ணா வசந்த் பற்றி எனது பதிவுகளில் எழுத ஆரம்பித்தால் அது முழுமை பெறாது என்று கூறினேன். அதற்கு ஜெயபாலன் அப்படி எழுதினால் தனது எழுத்து திறமையை செல்வாக்கை வைத்து நான் இந்திய உளவுத்துறையின் ரா ஏஜென்ட் என்றும் அவர்கள் சொல்லி நான் பதிவுகள் போடுவதாகவும் எழுதுவேன் என்று கூறி அதே மாதிரி அவரும் என்னை ரா ஏஜென்ட் எழுத தொடங்க அவர் எழுதுவது உண்மையாக இருக்கலாம் என்று நம்பி பலரும் என்னை இப்போது வரை ரா ஏஜென்ட் என்றும் சென்னையில் கோடிக்கணக்கான பணத்துடன் பெரும் மாளிகையில் வசிப்பதாகவும் பலவித கதைகள்.
ஜெயபாலனின் அண்ணா வசந்த் இயக்கத்தில் நல்லவிதமாக இயங்கியவர் உமா மகேஸ்வரன் மரண தண்டனையில் சம்பந்தப்பட்ட ஆட்சி ராஜன் அவர்களுடன் மிக மிக நெருங்கிய நண்பர். இயக்கம் 1987 ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்பு
இயக்கம் முற்று முழுதாக இந்தியாவை விட்டு இலங்கைக்கு போனபோது உமாமகேஸ்வரன் வசந்தை தனிப்பட்ட முறையில் அழைத்து தான் கிளிநொச்சி மக்களின் பணத்தை வங்கியில் இருந்து கொள்ளையடித்து வந்து 5 கோடி வரை தமிழ்நாட்டில் செலவழித்துள்ளதாகவும் இதை வசந்த் பொறுப்பெடுத்து தமிழ்நாட்டிலிருந்து எந்த வழியில் ஆவது தனக்கு தங்கமாகவும் போதை மருந்தாகவும் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். வசந்தும் தனக்கு வசதியாக சில நண்பர்களை சேர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் கொலை பல கொள்ளைகள் சென்னையில் பெருமளவு மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் செய்து கேரளாவில் கொண்டு போய் விற்று வந்த அதில் வந்த பணத்தில் ஒரு பகுதியை போதை மருந்து தங்க கட்டிகள் வாங்கி படகில் கொழும்புக்கு அனுப்பி வந்தார்.
சென்னையில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் போய் பல தாய்மார்களின் தாலிக்கொடி செயின் போன்றவற்றையும் பறித்துக்கொண்டு போவார்கள் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் மோட்டார் சைக்கிளில் வந்து தாலிக்கொடி அறுப்பது செயின் பறிப்பது போன்றவற்றை உமாமகேஸ்வரன் கேட்டுக்கொண்டதற்காக செய்தது வசந்தும் அவனோடு இருந்த நண்பர்களும் இவர்கள் தான் இப்போது மோட்டார் சைக்கிள் வந்து கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு வழிகாட்டி.
சித்தார்த்தர் வசந்தை பலமுறை கண்டித்துள்ளார். பெண்களின் தாலிக்கொடி செயினை அறுக்க வேண்டாம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றை வாங்கி இருப்பார்கள் என்று, அதோடு அவர் சித்தார்த்தன் வசந்திடம் உன் அம்மாவின் தாலிக்கொடியை யாரும் அறுத்துவிட்டு செய்தால் உன் அம்மா இவ்வளவு கஷ்டப்படுவார்கள் கலங்குவார்கள் என்று கூற வசந்தும் ஏற்றுக்கொண்டார். மதுரையில் பெட்ரோல் நிலையத்தில் இருந்து வங்கியில் பணம் கட்ட சென்ற ஊழியரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்த போது எல்லோரும் பிடிப்பட வசந்த் தான் மட்டும் தப்பி இலங்கை வந்துவிட்டார். தனது தோழர்களை வெளியில எடுக்க இந்த முயற்சியும் செய்யவில்லை. இலங்கை வந்த வசந்தை உமா மகேஸ்வரன் கடுமையாகத் திட்டி பிடிபடாமல் கொள்ளையடிக்க தெரியாதா என்று சொல்லி ஒதுக்கி வைத்தார். பின்பு வசந்த் ஒரு நல்ல காரியம் செய்தார். உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு கொள்ளை கோஷ்டி போல் நடத்துவதாகவும் தங்களை போராட வந்தவர்களை கொள்ளைக்காரர்களாக மாட்டி விட்டதாகவும் அப்போ இயக்கத்தில் இருந்த தோழர்களிடம் uma மகேஸ்வரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்து விசாரணைகள் நடத்தி முள்ளி குளத்து முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இறந்தும் போனார்.
வசந்த் இறந்த பின்பு வசந்துக்கும் ஆட்சி ராஜனுக்கும் இருந்த நட்பை பயன்படுத்தி வசந்தின் அம்மா அதாவது லண்டன் புத்தி ஜீவி ஜெயபாலனின் அம்மா ஆட்சி ராஜனிடம் ஆட்சி ராஜன் வசந்த் நட்பை கூறி தனக்கு குடும்ப கஷ்டங்களை எல்லாம் கூறி கொழும்பில் வைத்து அழுதுள்ளார். ஆச்சி ராஜனும் கொழும்பில் வெள்ளவத்தையில் உமா மகேஸ்வரனுக்காக பல கொலைகள் கொள்ளைகள் செய்து வைத்திருந்த பணத்தில் ஒரு பகுதியை வசந்தின் குடும்பத்துக்காக அதாவது ஜெயபாலன் படிக்க மற்றும் வசந்தின் சகோதரி திருமணத்துக்கு சீதனம் மற்றும் பிரான்ஸ் போவதற்கு எல்லா வசதிகளும் பண உதவி ஆட்சி ராஜன் தான் செய்தார். உமா மகேஸ்வரன் மரண தண்டனைக்கு பிறகு, மரண தண்டனைக்கு உரிமை கோரியவர்கள் சித்தார்த்தன் மாணிக்கம் தாசனின் ஏற்பாட்டின் படி சென்னை வந்து எனது பாதுகாப்பில் இருந்தபோது அப்போது நான் இயக்கத்தின் இந்திய பொறுப்பாளராக இருந்தேன்.
வசந்தின் அம்மா வசந்தின் தம்பி ஜெயபாலனுக்கும் ஏதாவது பிரச்சனை நடந்து விடும் அதனால் இந்தியா கூட்டிக்கொண்டு போய் வெளிநாட்டுக்கு அனுப்பும் படி அழுது கொண்டு கூறியதால் ஜெயபாலனையும் இந்தியா அழைத்துக் கொண்டு வந்து எனது பாதுகாப்பில் விட்டார்.
எனது பாதுகாப்பில் இருந்தபோது மாணிக்கம் தாசன் ஆயுதங்களுடன் சென்னை வந்து இவர்களைகொலை செய்துஉமா கொலையை மறைக்க முயற்சி செய்தார். நான் விடவில்லை இது சம்பந்தமாக எனது பதிவுகளில் போட்டிருக்கிறேன். அப்போது ஜெயபாலன் ஆட்சி ராஜன் உட்பட யாரையாவது மாணிக்கம் தாசன் கொலை செய்து விட்டால் தான் இந்தியாவில் அனாதையாக இருக்க வேண்டும் தன்னை எப்படியாவது வெளிநாட்டுக்கு முதலில் அனுப்பி விட வேண்டும் என்று கெஞ்சிய காட்சி இன்னும் என் கண் முன்னால் நிற்கிறது. நான்தான் ஜெயபாலனையும் இன்னொரு தோழரையும் ஏஜென்சியை மிரட்டி அனுப்பி வைத்தோம். ஒரு லட்சம் வாங்கும் இடத்தில் அந்த ஏஜென்ட் எங்களிடம் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். ஜெயபாலன் லண்டன் போன காசு கொழும்பில் அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்து கொள்ளையடித்த பணம், அதைவிட வெக்கக்கேடு ஆச்சி ராஜனிடம் ரகசியமாக தனக்கு லண்டனில் செலவழிக்க கூடுதலாக டாலரும் வாங்கிக் கொண்டதுதான்.
சில வருடங்களின் பின்பு சென்னை வந்து இருந்தார். அவரின் அம்மா ஆட்சி ராஜனுக்கு திருமணத்துக்கு ஒரு பெண்ணையும், ஜெயபாலன் கனகாலமாய் காதலித்து வந்த பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். ஜெயபாலனுக்கு ஆட்சி ராஜன் வீட்டில் நானும் எனது மனைவியும் தாலி எடுத்துக் கொடுக்க ஜெயபாலன் தாலி கட்டினார். ஆச்சிராஜனின் மனைவியுடன் ஜெயபாலனின் அம்மா புரோக்கர் பணம் கேட்க ஆட்சி ராஜ ராஜனின் மனைவி செருப்பை கழற்றி அடித்தார். காரணம் அந்தப் பெண்ணை ஆட்சி ராஜன் பற்றிய உண்மைகளை மறைத்து பொய் சொல்லி கூட்டி வந்தது தான். கடைசியில் எனது வீட்டிலிருந்து ஜெயபாலனின் அம்மாவை நான் தான் இலங்கைக்கு அனுப்பி வைத்தேன்.
ஜெயா பாலன் அவரின் அண்ணா பற்றிய கடந்த கால உண்மைகள் வெளிவரக் கூடாது என்று என்னிடம் 2021 ஆம் ஆண்டு தொலைபேசியில் சண்டை போட்டார். அவர் நினைத்தார் நான் பயந்து விடுவேன் என்று. அண்ணா பற்றிய உண்மைகளை எழுதினால் தான் என்னை இந்திய உளவுத்துறை ரா ஏஜென்ட் என்றும் அதை தனது எழுத்தின் வலிமையை கொண்டு எல்லோரும் நம்புவார்கள் என்றும் என்னை பிளாக் மெயில் செய்தார்.
2021ல் நான் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் என்று கூறியவர் இப்போது 2025 இல் நான் டெல்லியில் வாமதேவனை வைத்து போதைப்பொருள் நிர்வாகம் பண்ணியதாக எழுதுகிறார். இனி என்ன எழுதுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவர் 2009 வரை வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் பற்றிய செய்திகளை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்து வந்தது எல்லோருக்கும் தெரியும்.
அதன் பின்பு இலங்கை போய் இலங்கை அரசாங்கத்திடம் பெருமளவு பணம் பெற்றுக் கொண்டு கிளிநொச்சியில் ஒரு NGO அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு தானும் ஒரு சமூக சேவையாளர் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்.
இவர் சம்பந்தப்பட்ட பல அசிங்கமான செய்திகள் எல்லாம் லண்டனில் பலர் கூறியுள்ளார்கள். இலங்கையிலும் இந்தியாவிலும் லண்டனிலும் எங்களுடன் கூட இருந்த ஒரு நண்பர் அவர் இப்போது மரணம் அடைந்து விட்டார் அவர் இவர் பற்றி பல செய்திகளை கூறி கவலைப்பட்டார். இவர் காதலித்து இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு லண்டன் போன பின்பு குழந்தைகள் பிறந்த பிறகும் காதலித்த மனைவி மேல் சந்தேகப்பட்டு படுக்கை அறையில் கேமரா வைத்து பல நாள் தெருவில் நின்று கண்காணித்துக் கொண்டிருப்பாராம். தனது காதல் மனைவி வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாரா என்று, இந்த விடயம் தெரிந்து வீட்டிலிருந்து அடித்து துரத்தப்பட்டிருக்கிறார். இறந்த நண்பர் இடம்தான் எல்லா விடயங்களையும் கூறி தனக்கு வீடு பார்த்து தரும்படி கேட்டுள்ளார். அந்த நண்பர் என்னிடம் கூறி கவலைப்பட்டார் அப்போது என்னோடு நெருக்கமாக தொலைபேசி தொடர்புகள் இருந்த ஜெயபாலன் இடம் இதைக் கேட்டு திட்டினேன். காரணம் நான் தான் தாலி எடுத்துக் கொடுத்தேன். அதுவரை காலமும் வெற்றி அன்னை வெற்றி அன்னை என்று பேசி வந்தவர் நான் கண்டித்தவுடன் நீர் எனது சொந்த வாழ்க்கையில் தலையெட்டு புத்தி சொல்ல தேவையில்லை என்று கடுமையாக சொன்னார். அதோடு அவர் லண்டனில் தனக்கு கஷ்டத்தில் பண உதவி செய்தவர்களை எல்லாம் அவர்கள் தனது மனைவியின் அழகுக்காகத்தான் செய்கிறார்கள் என்று தப்பான கதைகளை தனக்கு உதவி செய்தவர்களை பற்றியே கூறியுள்ளார்.
வெட்கக்கேடான விடயம் இவர் தனது எழுத்தில் பெண் விடுதலை பற்றி எழுதுவது தான். பின்பு ஜெர்மனி இருக்கும் ஒரு விடுதலைப்புலி ஆதரவாளர் பெண்ணை திருமணம் செய்ததாக படங்கள் போட்டிருந்தார்.
இவர் போட்ட வீடியோவில் முழுக்க தவறான செய்திகள். அரைகுறையாக எல்லாம் தெரிந்து கொண்டு தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் அது போலவே தனக்கு சாதகமாக தன்னைப் போலவே அரைகுறையாக தெரிந்தவர்களை பேட்டிகளும் போட்டு தானொரு சிறந்த பத்திரிகையாளர் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்.
இவர் இந்த வீடியோவில் அது போல் வாமா தேவனுக்கும் பிரபாகரனுக்கும் எந்தக் காலத்திலும் தொடர்பு இருந்தது இல்லை. யாரு இவருக்கு இந்த பொய் சொன்னார்கள் என்று தெரியவில்லை. வாமதேவனுக்கு இயக்கத்தால் 1983 கொடுக்கப்பட்ட பெயர் குமார். அவர் அதை கேப்டன் குமார் என்று கூறிக்கொள்வார். பிரபாகரன் எந்த தொடர்பும் இல்லாத போது எப்படி மலையகத்துக்கு அனுப்புவார். மட்டக்களப்பு வங்கிக் கொள்ளையில் உடன் மூன்று பேர் பிடிப்பட, வாமதேவன் தப்பி ஓடிப்போய் மலையகத்தில் ஒளிந்திருந்த வேலையில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் தான் அடைபட்டு வந்தார். வெளிக்கடை சிறையில் இருக்கவில்லை. Velikkada சிறை படுகொலையின் பின் அங்கு இருந்த மற்ற போராளிகளையும், magasin சிறையில் இருந்த தமிழர்களையும் பாதுகாப்பு கருதி மட்டகிழக்கு சிறைக்கு மாற்றினார்கள். நடந்த சம்பவங்கள் தெரிந்த பல பேர் இன்னும் விபரம் இருக்கும்போது இவர் துணிந்து இப்படியான பொய்யான தவறான செய்திகளை அவசரமா அவசரமாக போட வேண்டிய தேவை நான்தான் டெல்லியில் வைத்து வாமதேவன் ஆட்களை வைத்து போதை பொருள் கடத்தியதாக போட்டால் நான் வாமதேவன் சம்பந்தப்பட்ட பதிவுகளை எடுத்து விடுவேன், நினைத்து விட்தார். வாமதேவனின் பதிவுகளால் யார் யார் பாதிக்கப்பட போகிறார்களோ என்ற பயத்தில் இவர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் சந்ததியார் நிரஞ்சன் ராஜ்மோகன் கொலைகள் பற்றிய வீடியோக்கள் ஆயிரக்கணக்கானோர் பார்ப்பதால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் என்னையும் போதைப்பொருள் கடத்தல் காரணம் என்று நிரூபிக்க இவர் செய்யும் முயற்ச்சிகளை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
மேலும் அவர் நிர்மலா நித்தியானந்தன் சிறையில் இருந்து வெளியில் வர மாட்டேன் என்று கூறியதாக கூறுகிறார் உண்மையில் நிர்மலா இருந்த சிறை கடைசி நேரத்தில் இவர்களால் உடைக்க முடியாமலோ அல்லது அவசரத்தில் உடைக்காமல் போனதால் தான் நிர்மலாவால் வர முடியவில்லை என்பதுதான் உண்மை. பிளாட் B கேம்ப் இல் ஒரு காலமும் வாமதேவன் பொறுப்பாளராக இருக்கவில்லை. ஆனால் கொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிரார். நிக்கிற வெட்டியா வங்கிக் கொள்ளையின் பின்பு கொள்ளையடித்த நகைகளில் ஒரு பகுதியை வாமதேவனும், தற்போது லண்டனில் வசிக்கும் சுழிபுரத்தைச் சேர்ந்த சபாநாதனும் சேர்ந்து கொள்ளையடித்து மறைத்து வைத்ததை சங்கிலி கந்தசாமி கண்டுபிடித்து அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப் போகும்போது தலைவர் உமா மகேஸ்வரன் நேரடியாக போய் தடுத்து வாமதேவனை தலைமறைவாக பம்பாய் அனுப்பிவிட்டார். தமிழ்நாட்டுக்கு வந்தால் கட்டாயம் சுடுவேன் என்று கந்தசாமி தலைவரிடமே கூறியிருந்தார். இந்த விபரங்கள் எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நான் எனது பதிவுகளில் பதிவிட்டு இருக்கிறேன்.
ரவி, தாஸ் என்பவர்கள் யார் என்றே தெரியாது.
தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு எழுதும் ஜெய பாலன் முன்பு நான் உளவுத்துறை ரா ஏஜென்ட் என்று எழுதினார் இப்போது டெல்லியில் வைத்து நான் போதை மருந்து கடத்த செயல்பட்டதாக எழுதுகிறார். அடுத்த முறை என்ன எழுதுவார். இவரைப் போலவே வசந்தோடு கூட இருந்து கொலைகள் கொள்ளைகள் செய்து இலங்கைக்கு போதைப்பொருள் தங்கம் கடத்தியவர்கள் நான் எழுதும் போது நான் எழுதுவது தங்களையும் பாதிக்கும் என்று கூறினார்கள். இப்போது அவர்கள் இலங்கையில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதனால் நான் அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.
எமது இயக்கத்தின் இந்தியாவில் மற்றும் டெல்லியில் இருந்த மிகவும் பெருமதியான ஆவணங்கள் எல்லாம் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறி எடுத்துச் சென்ற ஜெய பாலனின் சகோதரர் வசந்த் அதைக் கொண்டு போய் தன்னோடு நெருக்கமான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக வைத்தார் ஆனால் இலங்கைக்கு அனுப்பவில்லை. அந்த நண்பரும் மனைவியும் சொந்தமாக சிறு அளவில் நுளம்பு வலை பின்னும் வேலை செய்து வந்தார்கள். எமது ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்கும் சாக்கில் அடிக்கடி கரூர் போய் அந்த வீட்டில் தங்கியிருந்து கடைசியில் நண்பரின் மனைவியுடன் பாலியல் ரீதியில் தொடர்பு கொண்டு அந்த நண்பருக்கு மிகுந்த நெருக்கடி கொடுத்துள்ளார்.
கடும் கோபத்தில் இருந்த அந்த நண்பர் வசந்த் மதுரை கொலை கொள்ளை யில் தப்பி இலங்கைக்கு ஓடிய பின்பு திருச்சி உறையூர் போலீஸ் அதிகாரிகளை கூப்பிட்டு தனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவ்வளவு இயக்க ஆவணங்களையும் கொடுத்து விட்டார் பிற்காலத்தில் அவற்றை எடுக்க தேடிச்சென்ற பொழுதுதான் அவரின் நண்பர் எல்லா விஷயத்தையும் கூறி வசந்த் பற்றி காரித்துப்பினர்.
ஜெயா பாலனின் என்னைப் பற்றிய அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். தான் அப்படி லண்டன் வந்தேன். தனது சகோதரன் இந்தியாவில் என்ன செய்தார் தனது தாய் என்ன செய்தார்கள் என்பது பற்றி எல்லாம் மற்றவர்களுக்கு தெரியாது தெரிந்தவர்கள் மறந்து இருப்பார்கள் இல்லாவிட்டால் தனது பிளாக்மெயில் எழுத்துக்கு பயந்து ஓடி விடுவார்கள் என்று நினைத்து விட்டார்
No comments:
Post a Comment