தான் எப்படி லண்டன் வந்தார். யார் அனுப்பியது. அவரை அனுப்ப யார் பணம் கொடுத்தது.
1989 ஆம் ஆண்டு முதல் அவரின் குடும்பத்துக்கு கொடுத்த பணம் கொழும்பில் ஆட்சி ராஜதனால் கொள்ளையடிக்கப்பட்ட பணமா இல்லையா? ஜெயபாலனின் சகோதரியின் திருமணத்துக்கு முழு பண உதவி செய்தது யார்?
ஜெயபாலனின் தாயின் சகோதரர் அதாவது ஜெயபாலனின் மாமாவின்முதல் மனைவியையும் பிள்ளைகளையும் யார் பொறுப்பில் சென்னையில் விட்டுச் சென்றார். அதன் மூலம் சென்னையில் நடந்த சம்பவங்களை ஜெயபாலன் எழுத தயாரா? ஜெயபாலனின் மாமா சென்னையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விடய மர்மத்தை உடைப்பாரா ஜெயபாலன்.
தனிப்பட்ட விடயங்களை பொதுவெளியில் பகிர்ந்து அசிங்கப்படுத்துவது மிகவும் தவறான செய்கை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஜெயபாலன் போன்றவர்களின் உண்மையான முகமூடிகளை கிழிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
உமா மகேஸ்வரன் கொலையில் பயனடைந்த ஒரே குடும்பம் ஜெயபால் இனனின் குடும்பம் தான். நாங்கள் இல்லை என்றால் இவர் லண்டன் பார்த்திருக்க முடியாது.
முன்பு நான் வரலாறு எழுதுவதாக நக்கல் பண்ணி எழுதினார்.
நான் வரலாறு எழுதவில்லை எனது சொந்த அனுபவங்களை தான் பதிவுகளாக போட்டிருந்தேன்.
அண்மையில் பல நண்பர்கள் தேசம் நெட் யூடியூபில் தகுதியற்ற பல நபர்களைக் கொண்டு வந்து அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயர்களிலும் அரசியல் அறிஞர்கள் என்றும் ஆரம்ப கால போராளிகள் என்ற பெயரிலும் பேட்டிகள் எடுத்து தன்னையும் அவர்களையும் புலம்பறப் படுத்திக் கொண்டு வருகிறார் என கூறினார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. இன்று ஜெயபாலன் பற்றி நான் போட்ட பதிவுகளுக்கு பின்பு ஜெயபாலன் அண்மையில் வெளியிட்ட யூட்யூபில் ராஜா நித்தியன் என்று அரசியல் அறிவாளிஇன் பேட்டியை எனக்கு அனுப்பி இருந்தார்கள். அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாகத்தான் இருந்தது. ஜெயபால் எனக்கு அவரைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். அதில் பல கட்டுக்கதைகளை ராஜா நித்தியன் அவிழ்த்து விடுகிறார். ஒன்றுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் உடைந்த போது லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர வந்திருந்த ராஜா நித்தியன் மற்றும் அவரது நண்பரும் தாங்கள் படித்தவர்கள் என்று நினைப்பில் பல கதைகளை விட பிரபாகரன் அவர்களை சுடுவதற்கு தேடித் திரிந்த போது அப்பொழுது திமுக எம்எல்ஏ செஞ்சி ராமச்சந்திரன் அவர்கள் தான் ராஜா நித்தியன் அவர் நண்பரையும் காப்பாற்றி திரும்ப லண்டன் அனுப்பி வைத்தவர்.
பின்பு 1984 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் லண்டன் சீனிவாசன் அவர்கள் கள்ள டிரெய்லர் செக் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மாற்றி பணத்தை சேகரித்து ஹாங்காங் கில் ஆயுதங்கள் வாங்க முயற்சி செய்து அந்த ஆயுதங்கள் தான் சென்னையில் பிடிபட்டது. சீனிவாசன் ராஜா நித்தியானை கள்ளக் கிரெடிட் கார்டு மாற்றுவது கள்ள டிராவலர் செக் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்.1984ஆண்டு ஆரம்பத்தில் அவர் டெல்லி வந்து என்னோடு தங்கியிருந்தபோது தன்னைப் பற்றி மிகப் பெருமை அடித்துக்கொண்டார். சீனிவாசன் தொலைபேசியில் என்ன தொடர்பு கொண்டுபேசும் போது ராஜா அதிகம் பொய் பேசுவான் நீ நம்பி விடாதே. அவனுக்குரிய வேலைகளை மட்டும் கொடு என்று கூறினார்.
ஒரு சில மாதங்கள் அவர் என்னோடு டெல்லியில் தங்கி இருந்து தங்கியிருந்து சில எம்பஸிகள் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எம்பிக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்தேன். அதன் பின் அவர் எனக்கு சந்தித்த விபரங்கள் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொடுப்பார். அதை நான் சென்னைக்கு அனுப்பி விடுவேன். அந்தக் குறிப்புகளின் பிரதிகள் நான் எனது முகநூலில் பதிவுகளாக போட்டு இரக்கிறேன்.
ராஜா நித்தியன் தேசம் நெட் யூட்யூபில் கூறியபடி எந்த ஒரு இந்திய அரசாங்க அதிகாரிகளையோ உளவுத்துறை அதிகாரிகளையோ சந்தித்ததில்லை.
பின்பு இவர் சென்னையில் புளொட் இயக்கத்தின் சமூக விஞ்ஞான கழக அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் மட்டுமே எடுத்துக் கொண்டு இருந்தார்.
உமா மகேஸ்வரன் இவரிடம் எந்த ஒரு ஆலோசனைகளும் கலந்துரையாடியதில்லை. பிரபாகரனுக்கு பயத்தில்தான் புளொட் இயக்கத்தில்இவர் தன்னை இணைத்துக் கொண்டார். அந்தப் பேட்டியில்
தான் பிரபாகரனுக்கும் ஆலோசனை வழங்கியதாக கூறியிருப்பது முழுப் பொய். அதோடு அந்த பேட்டியில் டக்ளஸ் தேவானந்தாவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். படித்த பண்பான ஒருவர் இலங்கையின் தமிழ் மக்கள் ஆதரவு பெற்ற ஒருவரை பற்றி பேசும்போது அதை ஊக்குவிக்கும் முகமாக ஜெயபாலன் திரும்பத் திரும்ப அதையே கேட்டு தனது அடிப்படைக் குணத்தை காட்டுகிறார். டக்ளஸ் தேவானந்தா பதவியில் இருக்கும்போது அவரின் தேவைஜெயபாலனுக்கு இருந்தது.
No comments:
Post a Comment