எங்கள் ஈழ விடுதலை இயக்க மறைந்த தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அவர்களின் கொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமானவர்கள் தான் அவர்கள் சிலைகளை திறந்து வைக்கிறார்கள்.
இம்மாதம் 16ஆம் தேதி ஒரு தலைவரின் சிலையை திறந்து வைப்பவர் நேரடியாக தலைமை தாங்கியவர் அத்தலைவரின் மரண தண்டனை என கொலை செய்தவர்.
சிலை திறக்கும் போது அவர் எப்படி மறைந்த தலைவரின் புகழ் பாடுவார். மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோழர்களை உசுப்பி விடும்போது மறைந்த தலைவர் செய்த அநியாயங்கள் என்று பலவற்றை பட்டியல் போட்டவர், இனி எப்படி அவரின் புகழ் பாடுவார் பார்க்க ஆசையாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இருக்கும் பழைய தோழர்கள் இப்போது இருக்கும் தலைவர்களிடம் இது பற்றி கேட்க இலங்கையில் இருந்து கொலை மிரட்டல் விடுகிறார்களாம். அதுவும் சுவிஸ் நாட்டில் இருக்கும் ஒரு தோழருக்கு பலமுறை கொலை மிரட்டல் வந்ததாம். நீ எப்படி இலங்கை வருவாய் இலங்கை வரும் போது உன்னை கொலை செய்வேன் என மிரட்டப்பட்டுள்ளார். விரைவில் பல செய்திகள் வரலாம்
No comments:
Post a Comment