பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 9 July 2025

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Wednesday, 9 July 2025
இலங்கைத் தமிழர்கள் அதுவும் குறிப்பாக வடமாகாண யாழ்ப்பாண தமிழர்கள் 1978 ஆண்டு முதல் பெருமளவு வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தார்கள். என்ன காரணம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர் நிறுவனங்கள், கொழும்பில் எல்லா விடுதிகளிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்தார்கள். அந்தக் காலங்களில் எல்லாம் கொழும்பில் எந்த ஒரு ராணுவ போலீஸ் பிரச்சனை இருக்காது. அதுபோல் யாழ்ப்பாணத்திலும் 1983 வரை பெரிய அளவு போலீஸ் ராணுவ பிரச்சனைகள் இருக்கவில்லை.
ஆனாலும் அல்பிரெட் துறையப்பாவை 50 தரத்துக்கு மேல் கொலை செய்த பலர் ஜெர்மனியில் அடைக்கலம் கேட்டார்கள்.
இவர்கள் வெளிநாடுகளுக்கு போக என்ன காரணம்.
1. பொருளாதாரத்தில் வளம் பெற
2. இயக்கங்களில் சேராமல் இருப்பதற்கு
3. இயக்கங்களின் கொலை முயற்சியில் இருந்து தப்ப
4. இலங்கை ராணுவம், போலீஸ் இருந்து தப்ப
5. தங்களின் அறிவு ஆற்றலால் வெளிநாடுகளை வளப்படுத்த
6. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் கூடுதல் சீதனம் கிடைக்கும் என்ற பேராசையால்
7. சீதனம் கொடுக்க முடியாமல் கஷ்டப்படும் தங்கள் குடும்ப சகோதரிகளை கரை சேர்க்க

இப்படியான பல காரணங்கள் இருக்கும்போது அடிப்படை காரணம் பொருளாதார வசதி தான் வெளிநாட்டு பயணங்களுக்கு உண்மையான பயணம் என்பது என் கருத்து. ஆனால் 1983 கலவரங்களுக்கு பின்னால் வெளிநாடுகளுக்கு படையெடுத்தவர்கள் உயிர் பயம் காரணமாகவே சென்றார்கள். அவர்கள் இடம் ஓரளவு பொருளாதார வசதி இருந்தபடியால் மேற்கு நாடுகள் போனார்கள். ஆனால் போரில் பாதிக்கப்பட்ட வசதியற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு வந்து இன்று வரை அகதியாகவே வாழ்கிறார்கள்
இவர்கள்வெளிநாட்டுக்கு போகும் காலத்தில் இருந்து இன்று வரை பல லட்சம் மக்கள் சொந்த தாயகத்தில் வாழ்ந்து தான் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருந்தது இல்லையா. விவரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment