தனது சொந்த நாட்டு மக்களையே இனப்படுகொலை செய்து புதைத்த அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் இனப்படுகொலையை உலக அரங்கில் அம்பலப்படுத்த கிடைத்த சந்தர்ப்பமாக செம்மணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்காக சொந்த தமிழ் மக்களையே காப்பாற்ற வந்த தமிழ் இயக்கங்கள் சொந்த தமிழ் மக்களையும் இளைஞர்களையும் கொலை செய்ததை அதன் விபரங்களை தமிழ் மக்கள் அறியக்கூடியதாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் எல்லா இயக்கங்களும் செய்த கொலைகளை ஓரளவு சரி தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அந்தக் கொலைகளை செய்தவர்கள் இன்றும் தமிழ் தலைவர்கள் ஆக வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு தமிழ் மக்களை பதவிக்காகவும் பணத்திற்காகவும் ஏமாற்றி வருவதை தமிழ் மக்கள் அறிய வேண்டும்.
தமிழ் விடுதலை இயக்கங்கள் செய்த தமிழர் படுகொலைகளையும், ஒரு நாட்டின் அரசாங்கம் செய்த இன படுகொலையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஆரம்ப காலங்களில் இருந்து இன்றுவரை விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் துரோகிகள் என்று கூறுவதை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியாது. கொலை கொலை தான்.
No comments:
Post a Comment