காலத்தின் கோலம்
1970 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் திரு அமிர்தலிங்கம் அவர்களும் அவரதுகட்சி தமிழரசு கட்சியும் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியும் பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற பதவி ஆசையால், தங்களுக்குப் போட்டியாக வரக்கூடிய எதிர் அரசியல்வாதிகளை துரோகியலென்று நச்சு விதையை அன்றைய உணர்ச்சிவசப்பட்டு இருந்த இளைஞர்களுக்கு கூறி கூறி அரசியல் எதிரிகளை கொலை செய்வித்தார்கள்.
                 .  கால ஓட்டத்தில் இவர்களால் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இளைஞர்கள் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் இயக்கங்களை உருவாக்கி தங்களுக்கு போட்டியாக வரக்கூடியவர்களை துரோகிகள் என்று கூறி கொலை செய்தார்கள். காலத்தின் கொடுமை அதில் அமிர்தலிங்கமும் துரோகி என்று கொலை செய்யப்பட்டார்.
ஈழத் தமிழினத்தை அழித்தது சிங்களவர்கள்  அல்ல. துரோகி என்று பயன்படுத்தப்பட்ட சொல்தான். துரோகி என்று கூறி எத்தனை எத்தனை தமிழ் அறிஞர்கள் இளைஞர்கள் தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
யார் உண்மையில் தமிழ் இனத்துக்கு
தமிழ் துரோகி என்று சரித்திரம் தான் அடையாளம் காட்ட வேண்டும்
No comments:
Post a Comment