பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 13 July 2023

பகுதி 6 சிதைந்த சித்தாந்தங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 13 July 2023

கொலை பட்டியல்

புலிகளால் துரோகிகளென கொலை செய்யப்பட்டவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு அமிர்தலிங்கம் திரு . சாம் தம்பி முத்து மாத்திரமல்ல முன்னை நாள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தலைவர் சம்பந்தமூர்த்தி முன்னே நாள் அரசாங்க அதிபர்களான திரு.பஞ்சலிங்கம், ஞானச்சந்திரன் அந்தோணி முத்து சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராசா ரூம் பாய்ந்து கல்லூரி உப அதிபரும் சட்டத்தரணி மகாலிங்கம் முன்னாள் பாராளுமன்ற மூதூர் உறுப்பினர் மஜீத் உட்பட பலர் கொல்லப்பட்டனர் புலிகள் இயக்க ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  சகல போராளி குழுக்களும் சிங்கள மக்கள் இல்ல எமது எதிரிகள் சிங்கள பேரினவாத அரசும் அதன் படைகளும் என பகிரங்கமாக கூறி வந்தனர் ஆனால் புலிகள் இயக்கமோ இந்தியா உளவு  அமைப்பான ரா

சொன்னதற்காகவே தாம் அனுராதபுரத்திலும் அறுந்தலாவையிலும் நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்களே கொன்றதாக பகிரங்கமான ஒத்துக் கொண்டனர்.


யார் யாரின் கைக்கூலிகளாக கை பொம்மைகளாக செயல்பட்டனர் என்பதை சம்பவங்கள் எடுத்துக்காட்டும்.


இலங்கை இந்தியா ஒப்பந்தத்துக்கு பின்னரும் மாதம் 50 லட்சம் ரூபாய் வீதம் இரண்டு மாதங்கள் மொத்தம் ஒரு கோடி ரூபாய் புலிகளுக்கு கொடுக்கப்பட்டதாகவும் இப்பணத்தை 1987 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் புலிகள்இயக்கம் பெற்றுக் கொண்டதாகவும் முன்னே நாள் இலங்கைக்கான இந்திய தூதர் தீக்ஷித் அறிவித்திருந்தார் புலிகளுக்கும் இந்திய படைக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பின்னரும் தமிழ்நாட்டில் தங்கி இருந்த புலிகளின் முன்னாள் யாழ்ப்பாந்திய பொறுப்பாளர் கிட்டு இந்திய உளவு படையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் தங்கியிருந்த புலிகள் இயக்கத்தவர்களுக்கு உணவுக்கு பணம் தேவை என கிட்டு கேட்டதற்கு நாங்க மத்திய அரசின் உதவியுடன் எம்ஜிஆர் அவர்கள் 75 லட்சம் ரூபாய் இந்திய பணத்தை ஹார்லிக்ஸ் அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்ததை அங்கு கடமையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி இந்திய படையை கொல்லும் புலிகளுக்கு பணம் கொடுக்கிறார்கள் என மனம் குமுறி கூறினார். விபச்சாரம் செய்தவர்கள் மற்றவர்களை பார்த்து விலை மாதர் என கூறுவது தான் வேதனை அளிக்கிறது

அன்று திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி நெடுமாறன் போன்றோரும் இந்திய படையை அனுப்பி இலங்கைத் தமிழருக்கு பாதுகாப்பு வழங்க என தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த பொழுதும் , இந்திய படையை இலங்கைக்கு அனுப்ப எம்ஜிஆர் அவர்கள் முயற்சி எடுக்காதது அவர் மலையாளி என்பதால் தான் என குற்றம் சாட்டிய போதும் தமிழ்நாடு பற்றி தொட்டிகளில் எல்லாம் மேடையில் இந்திய படையை இலங்கைக்கு அனுப்பத் தேவையில்லை தமிழ் விடுதலை இயக்கங்களை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தது போன்று இந்திய அரசு அங்கீகரித்தால் போதும் என பகிரங்கமாக கூறிவந்த ஒரே தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களே. 1983 ஆம் ஆண்டிலேயே வங்கம் தந்த பாடம் என்ற தலைப்பில் நூல் ஒன்றே வெளியிட்டு அன்னிய ராணுவம் ஒன்று எமதுநாட்டுக்குள் வந்தால் எந்த மாதிரியான விளைவுகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதே தமிழக மக்களுடைய கழகம் எச்சரித்து இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.


தியாகம் புலிகளுக்கு மட்டுமா சொந்தம்

தமிழீழப் போராட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் மாத்திரமா பங்கு கொண்டனர், தியாகங்கள் புரிந்தனர். அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்ததை தொடர்ந்து 1970 இல் உரும்பிராய் சிவகுமாரன்சிறைப்பட்டது ஏன் என்பதை தமிழினம் மறந்து விட்டதா? அன்று தமிழ் இளைஞர்கள் ஆங்காங்கே உதிரிகளாக தனி நபர் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தனர் முதலில் தென்னிலங்கை ஆளும் கட்சியினருக்கு அழகு சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்களோ தாக்குதல்களுக்கு இலக்காயினர் 69 டிசம்பரில் முன்னாள் யாழ் மேயர் துறையப்பாவின் காருக்கு குண்டு வைக்கப்பட்ட சம்பவம் நல்லூர் கிராம சபை தலைவர் குமாருக்கு குல சிங்கம் சுடப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் தனிநபர் பயங்கரவாத செயல்களின் பிரதிபலிப்பாகும். இளைஞர்கள் சரியான அரசியல் சிந்தனையோ தெளிவோ இல்லாததால் இவ்வாறான தனி நபர்களை அரசு இயந்திரமாக அல்லது அரசு இயந்திரத்தின் பிரதிநிதிகளா கருதினர் உண்மையில் அன்று தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிய அரசு இயந்திரமான போலீஸ் ராணுவம் உயர் அதிகார பீடம் ஆகியவற்றை அரசியல் தெளிவற்ற இவர்களால் இனம் காண முடியவில்லை.


கல்வி தரப்படுத்தலும் தமிழ் மாணவர் எதிர்ப்பும்

1971இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசின் கல்வி அமைச்சர் பதிவுதீன் முகமத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி பெறு பெறுகளில் தரப்படுத்தல் எனும் செயல்பாடு தமிழ் மாணவர்களுக்கு குறிப்பாக பல்கலைகழக அனுமதியை நாடிய மாணவர்களுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஆகவே இந்த தரப்படுத்தல் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் சாத்வீகப் போராட்டங்களிலும் வன்முறை போராட்டங்களிலும் ஈடுபட்டனர் சத்தியசீலன் அரியநாயகம் போன்றோர் தலைமையில் இயங்கிய மாணவர்கள் தமிழ் மாணவர் பேரவை என்று அமைப்பை உருவாக்கிக் கொண்டனர்


விதமா அமைக்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையிலிருந்து பலர் தனித்தனி குழுக்களாக அரசுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர் இந்த நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் தனியார் பற்றி கருத்துக்கள் வளர தொடங்கின. தமிழரசு கட்சியின்  ஊர் காவல்துறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுயாட்சி கழக ஸ்தாபரகருமான வி நவரத்தினம் அவர்களும் அப்போது தனியாயிட்சி கருத்தைக் கொண்டிருந்தார்.

வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் ஒன்றிலேயே உரும்பிராய் சிவகுமாரனும் இருந்தார். பண்ணை பாலத்துக்கு குண்டு வைத்தவரும், ஏ எஸ் பி சந்திரசேகராவின் ஜிப்புக்கு குண்டு வைத்தவரும் இவரேயாவார். அத்துடன் யாழ் மாநகர சபை மேயர் துறையப்பாவின் காருக்கு குண்டு வைத்து தகர்த்தபோது துரையப்பா உயிர் தப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசின் பிரதி அமைச்சராக இருந்த சோமவீர சந்திர ஸ்ரீ யாழ் வந்தபோது அவரது காரையும் குண்டு வைத்து தகர்க்க முயன்றார்.

1972 ஆம் ஆண்டு சத்திய சீலன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை குழுக்கள் பல அரசிடம் பிடிபட்டது இதைத் தொடர்ந்து யாழ் கிருபாகரன் அளவெட்டி ஆனந்தன் போன்றோர் மாணவர் பேரவை வழிநடத்தி அரசுக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தினர் இந்த நேரத்தில் மாணவர் பேரவையின் வளர்ச்சி கண்ட திரு அமிர்தலிங்கம் மாணவர் பேரவையை தமிழரசு கட்சி வாலிப முன்னணியுடன் இணைப்பதில் முயன்று வெற்றி கண்டார்.


1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு கட்சி தமிழ் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகியது இதைத் தொடர்ந்து வாலிப முன்னணி மாவை சேனாதிராஜா தலைமையில் இளைஞர் பேரவையாக மாற்றம் பெற்றது

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாலாவது உலகத் தமிழராட்சி மாநாட்டின் போது இலங்கை ராணுவத்தால் உயிரிழந்த ஒன்பது இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இளைஞர் பேரவை நடத்திய போராட்டங்களின் காரணமாக மாவை சேனாதிராஜா காசியானந்தன் உட்பட 42 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில்வைக்கப்பட்டனர். இதனால் இளைஞர் பேரவையை புஷ்ப ராஜா வரதராஜா ஆகியோர் வழி நடத்தினர். இக்காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மிதவாத போக்கே பிடிக்காத இளைஞர் பேரவை தனித்து இயங்க.தீர்மானித்தது.


மாவை சேனாதிராஜா காசி ஆனந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட பின் இளைஞர் பேரவையின் தலைமைகள் இவர்களுக்கே வழங்கப்பட்டது இதனால் இளைஞர்கள் மத்தியில் கசப்புணர்வு தோன்றி ஒரு பிரிவினர் ஆயுத பிரிவாக தனித்து இயங்க தீர்மானித்தனர்




பகுதி 7 தொடரும்




logoblog

Thanks for reading பகுதி 6 சிதைந்த சித்தாந்தங்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment