தனித்த நிலையில் சிறிலங்கா படையின் முன்னேற்றத்தை புலிகலினாள் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் எமக்கு உதவி செய்ய யாரும் முன் வர மாட்டார்களா என்று ஏக்கம் யார் குணா நாட்டு மக்களிடம் காணப்பட்டது யாரும் மறுக்கவோ மறந்து விடவும் முடியாது அதேபோன்று தமிழ் மக்களே அழிவிலிருந்து காப்பாற்ற இந்தியா முன் வர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் பல தரப்பினராகவும் முன் வைக்கப்பட்டது இதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை ஆதரவுடன் இந்திய விமானங்கள் இலங்கைக்குள் புகுந்து வடபகுதியில் உணவுப் பொட்டலங்களை போட்டதும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இலங்கை இந்திய அரசியலுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளும் முடிவில் ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும், இந்தியப் படை வருகையும் வரலாற்று நிகழ்ச்சியாகும்
இந்தியாவின் தலையீட்டைப் பற்றி சரியான கணிப்பு என்ற மேற்கொள்வதற்கு 1987 ஏப்ரல் மே மாதங்களில் யாழ்ப்பாணத்து நிலவிய உண்மையான எதார்த்த பூர்வமான நிலையினை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
அன்று யாழ்ப்பாணத்தில் ஒருபுறம் ஸ்ரீலங்கா படையின்அழித்தொழிப்பு மறுபுறம் உணவு மற்றும் எரிபொருள் மீதான தடை யாழ்ப்பாண மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை கூடிய விலை கொடுத்தும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை பெருமளவு மக்கள் பட்டினி சாவை எதிர்நோக்கி நின்ற நிலை இருந்தது. இன்று மனிதாபிமானத்தையும் இனங்களுக்கு இடையேஇடையே புரிந்துணர்வும் நிலவு வேண்டும் என்று பேசித் திரிவோர் அன்று அரசின் இவ்வாறான மனிதாபிமானமற்ற பயங்கர இன ஒழிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக ஒரு குரல் தான் எழுப்பதன் மூலம் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பதே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காலம் சென்ற விஜிய குமாரர் ரணத்துங்க உட்பட சில இடதுசாரி தலைவர்கள் தவிர்ந்த ஏனையசகலரும் வாய்மூடி மௌனம் சாதித்தன் மூலம் தமிழருக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு துணை போயினர்.
இந்த நிலையில் தான் இந்தியாவின் நேரடி தலையீடு ஏற்பட்டது என்பதும் இந்திய அரசின் பிரதிநிதிகளாக திருவாளர்கள் பூரியும் சென்குத்தாவும் காங்கேசன் துறை வந்தடைந்த பொழுது யாழ்ப்பாண மக்கள் காட்டிய ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் எந்த அளவுக்கு தமிழ் மக்கள் இந்திய தலையீட்டை வரவேற்றுநர் என்பதை விளக்கும். குறிப்பாக அவ் வரவேற்புக்கு புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆன யோகி திலீபன் போன்றோர் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் தலையிடையும் அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் 1983 ஆம் ஆண்டிலேயே மக்களை எச்சரித்த இயக்கங்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (NLFT) ஆகியவை ஆகும்.
இலங்கை இந்தியா ஒப்பந்தம்
இந்தியா இலங்கை ஒப்பந்தம் திடீரென ஏற்பட்ட ஒப்பந்தம் அல்ல இந்தியா தனது நீண்ட கால எண்ணத்தை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் இதற்கான சந்தர்ப்பத்தை விரைவுபடுத்தி கொடுத்தது. இதற்கு தீர்க்கதரிசனம் மற்ற முறையில் நடந்து கொண்ட இலங்கை அரசும் தமிழ் இயக்கங்களும் துணைபோகினர்.
இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானது இன்று நேற்று அல்ல 1986 ஆம் ஆண்டு க்காக முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன பெங்களூர் சென்றிருந்த வேளையில் இந்தியாவின் ஏற்பாட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஜே ஆர் ஐ சந்திக்க பெங்களூர் சென்றார் இந்த பேச்சு வார்த்தைகுறிப்பிட்டபடி நடைபெறவில்லை.
இதைத் தொடர்ந்து 1987 ஜூன் 25ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் திரு. பூரிக்கும் புலிகளின் தலைவர் யோகிக்கும் இடையே பூர்வாங்க பேச்சுக்கள் நடைபெற்றன அதைத் தொடர்ந்து புலிகளின் தலைவர்கள் ஆன பிரபாகரன் மாத்தையா குமரப்பா யோகி சங்கர் ஆகியோருக்கும் ஜூலை மாதம்19ஆம் தேதி இலங்கை இந்திய ஒப்பந்த நகல் திரு.பூரி அவர்களால் கொடுக்கப்பட்டு அதைப்பற்றி ஆராயப்பட்டது ஜூலை 23ஆம் தேதி புலிகள் இந்த நகல் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து புலிகளின் தலைவர் பிரபாகரன் புது டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது பற்றி பத்திரிகையில் வெளிவந்த அறிக்கைகளில் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் எக பிரதிநிதிகளாக இந்தியாவினால் அங்கீகரிக்கப்பட்டு தலைவர் பிரபாகரன் புதுடில்லி செல்கிறார் என்று புலிகளினால் விடப்பட்ட செய்திகளாக வெளிவந்தன. இந்த செய்தி வெளிநாடுகளில் உள்ள புலிகளின் செய்தி பிரிவுகளிலும் வெளிவந்தன.
ஏக பிரதிநிதியாக தான் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணிச்சென்ற பிரபாகரன் ஏனைய இயக்கங்களும் இந்த ஒப்பந்தம் பற்றி அறிவிக்க அழைக்கப்பட்டது கண்டு ஆத்திரப்பட்டார் தனது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டார்.
ஆனால் 28 ஆம் தேதி நள்ளிரவு வரை முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் அவரது ஆலோசர்கள் உடனும் பிரபாகரனும் அவரது சகாக்களும்டெல்லியில் நடத்திய பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தனர் அதைத் தொடர்ந்து 29ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியாலும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
புலிகள் இயக்கத்துடன் நான்கு நாட்களாக பேச்சு நடத்திய இந்திய அரசினால் ஒப்பந்த நகல் ஏனைய இயக்கத்தவர்களுக்கு 27 ஆம் தேதி சில நிமிடங்கள் மட்டுமே பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டது இந்த குறுகிய கால அவகாசத்தில் படித்து தெரிந்து கொண்ட ஒப்பந்தத்தில் குறைபாடுகளை ஏனைய உங்கள் சுட்டிக் காட்டிய போதும் அதில் திருத்தங்கள் செய்ய இந்திய அரசு மறுத்துவிட்டது முக்கியமாக மலைய மக்கள் பிரச்சனை மொழி தேசிய இனம் போன்ற முக்கிய விடயங்கள் சம்பந்தமாக ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகளை ஏனைய இயக்கங்கள் சுட்டிக் காட்டியதுடன், புளொட்,EPRLF,TELO,ENDLF ஆகியன இணைந்து எழுத்து மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஒப்பந்தத்தை தொடர்ந்து நடைபெற்ற சுகுமலை பொதுக்கூட்டத்தில் (இன்று ஜனாதிபதியை நம்புகிறேன் என்று பேசுகின்ற பிரபாகரன் அதே வாயினால் தான்) அன்று ராஜீவ் காந்தியின் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அதன் காரணமாகவே ஆயுதங்களே கையளிப்பதாகவும் தமிழர்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் கையளிப்பதாகவும் கூறினார்.
இந்திய படையின் வருகையை பற்றிய சரியான அரசியல் தெளிவும் சாணக்கியமும் இருந்திருந்தால் கடந்த இரண்டரை வருட காலமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் அனுபவித்துள்ள துன்பங்களை துயரங்களைத் தவிர்த்து அரசியல் ரீதியான தீர்வு ஒன்றினை கண்டு இருக்கலாம்.
பகுதி 4 தொடரும்
No comments:
Post a Comment