புலிகளின் இன்றைய நிலைப்பாடு
கடந்த ஒரு வருட காலமாக ஜனாதிபதியுடனும் அவரது ஆலோசர்களுடனும் புலிகள் இயக்கத்தினர் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அன்று இந்தியாவின் செல்ல பிள்ளைகளாக இருந்து இந்தியா தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கும் என்று கூறியவர்கள் இன்று இலங்கை ஜனாதிபதியின் அன்பு செல்வங்களாக மாறியுள்ளனர் . ஜனாதிபதி பிரேமதாசாவில் தமக்கு நம் நம்பிக்கை உண்டு என்றும் அவர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என தான் பூரணமாக நம்புவதாகவும் வடக்கு கிழக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதற்காக தம்மை தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மேகப் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் தாமே இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்டவர்கள் என உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர் ஒருபுறம் தாம் ஜனநாயக.செயற்பாட்டுக்குள் வந்து விட்டதாக கூறிக்கொண்டு மறுபுறம் ஆயுதப்பணிகளாக அச்சுறுத்தல்களிலும் அடாவடித்தனங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் ஆயுத பலத்தின் மூலமாகவும் இலங்கை அரசின் உதவியுடனும் தங்களை தமிழ் மக்களின் இரட்சகர்கள் என காட்ட முனைகின்றனர். இதை உறுதி செய்யும் விதத்தில் யோகியிடம் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட சந்தித்தபோது தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பார்களா எனக் கேட்டபோது மக்கள் வேறுவருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு இருக்காது ஏனெனில் வேறு எவரும் தேர்தலில் போட்டியிட இருக்க மாட்டார்கள் என யோகி பதிலளித்துள்ளார்
ஜனநாயகம் என்றால் என்ன என்பதை இந்த சாதாரண மக்கள் கூட அறிவர் வடக்கு கிழக்கில் இன்று ஜனநாயகம் புலிகளின் ஆயுதங்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதாகவே விளங்குகின்றது. அங்கு பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் எதுவுமே மக்களுக்கு இல்லை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் கூட பரம ரகசியம் தமிழ் மக்கள் கூட அதனை தெரிந்து கொள்ள உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். இதுதான் புலிகளின் இன்றைய நிலைப்பாடு.
தமிழர் பிரச்சினையில் தங்களுக்கு மட்டுமே பேசுவதற்கு உரிமை உண்டு. ஏனையோர் யாவரும் துரோகிகள் இந்தியாவின் ஏஜென்ட்கள் காட்டி கொடுத்தவர்கள் அதனால் தான் திருவாளர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோருக்கு வீரவேங்கைகளினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என புலிகள் பகிரங்கமாக அறிக்கையில் விடப்படுகின்றன புலிகள் இயக்கத்தின் அரசியல் வரலாற்றை உணர்ந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல.
இன்று தமிழ்நாட்டில் புலிகள் இயக்கத்துக்கு புகழாரம் சூட்டுபவர்கள் திக பொதுச் செயலாளர் வீரமணிய அவர்களும், 1984 இல் தமிழ் மக்களே காக்க இந்திய படையை அனுப்பாததால் தான் தென்குமரியில் இருந்து பாதயாத்திரை செய்து படை திரட்டி இலங்கைக்கு படையெடுத்து செல்லப் போவதாக கூறி ஓட்டைப்படையில் கடல் கடக்க முயன்று புகழ்பெற்ற திரு பி நெடுமாறனும் ஆவார். 1986 ஆம் ஆண்டு திமுக தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் தனது பிறந்த நாளை ஒட்டி சேர்க்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை புலிகள் இயக்கத்துக்கு வழங்கிய பொழுது எம்ஜிஆர் ராஜீவ் காந்தி கூட்டில் நம்பிக்கை கொண்டு இருந்த அரவணைத்தை கையை உதறித் தள்ளுவது போன்று அப்பணத்தை பெற மறுத்தார் பதிலாக எந்த இந்திய ராணுவம் வடக்கு கிழக்கில்
தமிழ் மக்களே கொன்று குவித்ததுடன் பெருமளவு கொடுமைகளையும் கொள்கைகளையும் நடத்தியது என்று புலிகள் இயக்கத்தினால் குற்றம் சாட்டுகின்றனாரோ அதே இந்திய ராணுவத்தை அனுப்பிய இந்திய அரசின் உதவியோடு தமிழ்நாடு முதல்வராக இருந்து மறைந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களிடம் பகிரங்கமாக மூன்று கோடி இந்திய ரூபாயை புலிகளின் தலைவர் பிரபாகரன் பெற்றதுடன் ஈரோஸ்இயக்கத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இந்திய பணமாக பெற்றுக் கொடுத்தார். இது தவிர எம்.ஜி.ஆர் மூலம் 30 கோடி ரூபா பணம் இந்திய பணமாக குளியல் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்டதாக தமிழ்நாடு உளவுத்துறையினர் கூறியுள்ளனர்.
வடமாராட்சி தாக்குதலின் போது பெருந்தொகையான ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் விமானங்களை சுட்டு வீழ்த்தக் கூடிய சாம் 7 ரொக்கட்டுகளையும் இந்தியா தந்து உதவியது என அன்று பெருமைப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரே.
இன்று வடமராட்சி தாக்குதல் எப்போது என்ன நேரம் மேற்கொள்ளப்படும் என்ற முழு விபரமும் ரா அமைப்புக்கு தெரியும் அதனால் ரோ அமைப்பு எனக்கு பொய் தகவல் தந்தது இதனால் நாம் தோல்வியை தழுவ நேர்ந்தது அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருந்தேன் பிரபா யாழ்ப்பாணத்தில் இருந்து எனக்கு தகவல் தந்தார் ஆயுதங்கள் அவசரம் வேண்டும்இந்தியாவிடம் பெற்று உடன் அனுப்புங்கள் என்று. ஆனால் ஆயுதம் தர இந்தியா முன் வரவில்லை என்று புலிகளின் நல்லூர் எழுச்சி விழாவில் பாலசிங்கம் பகிரங்கமாக கூறியுள்ளார்.
தங்கள் நலனுக்கேற்ப பேசுவது எழுதுவதும் நண்பர்களை மாற்றிக் கொள்வதும் புலிகள் இயக்கத்துக்கு கைவந்த கலையாகும் எனவே தாங்கள் செய்த அரசியல் விபச்சாரத்தை மூடி மறைக்க மற்றவர்களுக்கு துரோகிகள் என்ற பட்டம் சூட்ட தண்டனை வழங்க இவர்களுக்கு என்ன தகுதி உண்டு.
பகுதி 6 தொடரும்
No comments:
Post a Comment