பகுதி இரண்டு தொடர்கிறது
இந்திய படை வெளியேற்றம்
1987 ஜூலை மாதம் 29 ஆம் தேதி இடம்பெற்ற இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தொடர்ந்து வடகிழக்கில் குறிக்கப்பட்டு இருந்த இந்திய படையினர் முற்றாக இலங்கையில் இருந்து வெளியேறி விட்டதாக இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் திரு ரஞ்சன் விஜயரத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இந்திய படை இலங்கைக்கு ஏன் வந்தது எவ்வாறு வந்தது என்பது நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று
1977 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு கடைபிடித்த வெளி விவகார கொள்கை காரணமாக இந்தியா தனது தனித்துவத்துக்கும் சுயநலத்துக்கும் பாதிப்பு அச்சமும் ஏற்படுவதாக கருதியது. இமயமலை தொட்டு தென் துருவமரையும் உள்ள நில நீர்ப்பரப்பில் இந்தியாவிற்கு தடையாக இருப்பது இலங்கை மாத்திரமே. இதனால் மாத்திரம் இல்லை அண்டை நாடுகளின் சிறுபான்மை இனப் பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் தனது சொந்த நாட்டில் உள்ள சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையே பெறுவதுடன் அண்டை நாடுகள் தனது ஆளுமைக்கு அல்லது நல்லெண்ணத்துடன் செயல்பட முடியும் என்பதை நிலைநிறுத்தவும் இந்தியா விரும்பியது. அத்துடன் மட்டுமல்ல ராஜீவ் காந்தியின் தலைமையில் உள்ள இந்திய அரசாங்கம் பொருளாதார சமூக ரீதியாக இந்திய மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத நிலையில் அந்நிய நாடுகளில் தலையிடுவதன் மூலம் தனது இயலாமையைமூடி மறைக்கவும் செல்வாக்கைப் பெருக்க அல்லதுபாதுகாத்துக் கொள்ளவும் முனைந்தது
1971 இல் பங்களாதேஷ் பிரச்சினையில் தலையிடும் 1983 முதல் இலங்கை பிரச்சனையில் நேரடியாக தலையிட்டதும் 1988 மாலைதீவு பிரச்சனை தலையிட்டதும் இதனை நன்கு புலப்படுத்தும் பாகிஸ்தானின் மிக நெருங்கிய நண்பனாக விளங்கிய அமெரிக்கா கூட கிழக்கு பாகிஸ்தானில் இந்தியா தலையிட்டு பங்களாதேஷை உருவாக்கிய பொழுது தலையிடவில்லை என்பது இலங்கைய அரசியல் தலைவருக்கு அன்று விளங்காது இருந்தது.
இந்திய தேர்தலின் பின்பு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த vp சிங்குக்கு எனது சிறுபான்மை அரசை பாதுகாப்பதற்கும் நெருக்கடி மிக்க தனது நாட்டின் பொருளாதார சுமையிலிருந்து தனது ஆட்சியை பாதுகாப்பதற்கும் கூடிய அளவு தேவையற்ற வெளிநாட்டு சிலவினங்களை குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது ஆனால் அதே நேரத்தில் அண்டை நாடுகளில் தனது ஆளுமையை அல்லது அதிகார பிரயோகத்தை கைவிடுவதாக அது இல்லை இந்திய வெளி விவகாரகொள்கைகளை பொருத்தவரை அன்று ராஜீவ் காந்தியினால் கடைபிடிக்கப்பட்ட கொள்கைக்கும் இன்று விபி சிங் அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கும் இடையே வேறுபாடு காண முடியாது.
இலங்கை அரசின் நிலைப்பாடு
இலங்கை அரசை பொருத்தவரை தேசிய இனப் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு ஒன்றை காண்பதற்கு பல்வேறு காரணங்களினால் நிர்ப்பந்திக்கப்படும் அதே வேலை சிங்கள பெருமை சக்திகளின் எதிர்ப்பையும் எதிர் நோக்க வேண்டியுள்ளது இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தொடர்ந்து இன்று வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளான மாகாண சபை சட்டம் தமிழ் மொழியும் உத்தியோக மொழியாக அங்கீகரிக்கும் சட்டம் நாடற்றவருக்கு பிரஜா உரிமைகளும் வாக்குரிமையும் வழங்கும் சட்டம் ஆகியன நிர்பந்தத்தின் காரணமாக சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எதிராக தமிழ் மக்களின் ஆதரவினைபெரும் நோக்கத்துடனும் தமிழ் மக்களின் ஓரணியில் திரள்வதை தடுக்கும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என்றோ தமிழர்களின் அபிலாசைகள் உரிமைகள் அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்றோ எண்ணத்துடன் இச்சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை திரு தொண்டமான அமைச்சராக்கியது தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு உதாரணமாக மாட்டாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தை 1964 டிசம்பரில் பத்திரிகை மசோதாவின் போது கவிழ்ப்பதற்கும் 1977 க்கு முன்னர் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு எதிராக ஜே ஆர் நடத்திய சத்திய கிரக போராட்டம் போன்றவற்றில் அளிக்கப்பட்ட ஆதரவர்க்கும் 1977 இல் நடந்த தேர்தலி ல் நுவரெலியா மஸ்கேலியாதொகுதி தவிர்ந்த ஏனையதொகுதிகளில் திரு. தொண்டைமானம் அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அளித்த ஆதரவுக்கு நன்றி கடன் ஆகவே அமைச்சர் பதவி தொண்டைமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1985 திம்பு பேச்சுவார்த்தைநடைபெறும் வரைக்கும் உள்ள எட்டு ஆண்டு காலம் திறன் தொண்டமான் அமைச்சராக இருந்ததும் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பிரச்சனையோ வாக்குரிமை பிரச்சனையோ தீர்க்க தீர்க்கமான எவ்விதமானநடவடிக்கைகளிலும் அரசு இறங்க வில்லை என்பதை நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும்.
திம்பு பேச்சின் போது மலையகமக்களின் பிரச்சினையை கூட்டணி உட்பட ஏனைய அனைத்து இயக்கங்களும் முன்வைத்ததுடன் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான நான்கு அம்சக் கோரிக்கைகளில் மலையக மக்களின் பிரச்சினையும் ஒன்றாக முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதனால் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்குடன் மலையகமக்களும் இணைந்து விடுவார்களோ என்ற அச்சமும் பிரித்தாலும் தந்திரமே மலையாகமக்களின் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் வழங்க இலங்கை அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களும் பதிவு மக்களாகவே கணிக்கப் படுகின்றனர் இவர்களின் இந்த நாட்டின் வம்சாவளி மக்களிலிருந்து வேறுபட்டவர்களாகவே கணிக்கப்படுகின்றனர் என்பது மறைக்க முடியாது உண்மையா கும்.
இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்தை ஆயுத முனையில் அடக்க முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை 1987 வரை ஜே ஆர் ஜெயவர்த்தனாஅரசுக்கு இருந்து வந்தது. இயக்கங்களுடைய ஏற்பட்ட மோதல்களும் அழிப்புகளும் இவ்வண்ணத்துக்கு மேலும் வலுவூட்டின. இயக்கங்கள் சகலகம் ஒன்றுபட்டு செயல்பட முடியாமையும் அந்நிய சக்திகளுக்கு ஆதரவாக பெரும்பாலான இயக்கங்கள் செயல்பட்டதையும் சுய சக்தியில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக அந்நிய சக்திகளின் ஆதரவில் தங்கி நிக்கும் நிலை இயக்கங்களுக்கு ஏற்பட்டமைஆகியன இலங்கை தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட தூர்தர்ஷ்டமாகும்.
இந்த நிலையில் தான் 1987 மே மாதம் நடைபெற்ற வடமராட்சி தாக்குதலையும் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தையும் இந்திய படைவருகையும்நாம் ஆராய வேண்டும்.
வடமராட்சி தாக்குதல் இடம் பெற்ற வேலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈரோஸ்தவிர்ந்த மற்ற இயக்கங்கள் யாவும் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், வடக்கு கிழக்கில் அவை செயல்பட முடியாது இருந்தன. இதனை நன்குணர்ந்த இலங்கை அரசு வடமாராட்சி தாக்குதலை ஆரம்பித்தது இந்த தாக்குதலை வடமராட்சி தாக்குதல் என எல்லோராலும் அழைக்கப்பட்டாலும் அந்த நேரத்தில் விமான தாக்குதலும் செல் தாக்குதலும் குடாநாடு எங்கும் மேற்கொள்ளப்பட்டது. விமான தாக்குதல் கடற்படை பீரங்கி தாக்குதல் செல் தாக்குதல் ஆகியவற்றின் துணையுடன் முகாம்களில் அடைப்பட்டு கிடந்த ஸ்ரீலங்கா படையினர் ஊர்களுக்குள் முன்னேற தொடங்கினர் இதனால் குடாநாட்டில் குறிப்பாக வடமராட்சியில் ஏற்பட்ட இழப்புகள் மறக்க முடியாத வரலாறு ஆகும்.
இயக்கங்களிடையே ஒற்றுமையும் இயக்கங்களை புலிகள் தடை செய்யாமலும் இருந்திருந்தால் புலிகள் தனியாக வடமாராட்சி தாக்குதலின் போது போரிட்டு தோல்வியே தழுவி இருக்க தேவையில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்தாகும். யாழ்கோட்டை பலாலி காரைநகர் நாவற்குளி வல்வேட்டித்துறை பருத்தித் துறை முகாம்களிலிருந்து படையினர்வெளியே வர முடியாதவாறு அந்த முகாம்களை சுற்றி எல்லா இயக்கங்களும் ஏதோ ஒரு விதத்தில் காவல் அரண்கள்அமைத்து காத்து நின்றதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.
பகுதி மூன்று தொடரும்
,
No comments:
Post a Comment