பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 13 July 2023

பகுதி 9 சிதைந்த சிந்தாதங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 13 July 2023

பஸ்டியாம் பிள்ளை கொலை


தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய பல தகவல்களை பெற்றிருந்த வஸ்தியாம்பிள்ளை தனது பதவி உயர்வை கருத்தில் கொண்டு இந்த தகவல்களை தனது உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்காது ரகசியமாக வைத்திருந்தார்.

1978 ஏப்ரல் மடு கோயிலுக்கு அருகாமையில் இருந்த தமிழில விடுதலைப் புலிகள் இயக்க முகாம் ஒன்றே புலனாய்ந்து அறிந்து அங்கு வாகனம் ஒன்றில் மூன்று போலீசாரிடம் மாத்திரம் சென்றார். அவர் அங்கு செல்லும்போது செல்லும் இடத்தைப் பற்றி தமது மேலதிகாரிக்கு அறிவிக்காமல் சென்றார். பஸ் தியா பிள்ளை அங்கு சென்றபோது முகாமில் உமா மகேஸ்வரன், நாக ராசா வாத்தி, சோட் பாலா என்ற பாலா அன்னை செல்லக்கிளி அம்மன் ரவி ஐயர் கருப்பு போன்றோர் உட்பட முக்கிய  புலிகள்இயக்க உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பண்ணையில் வேலை செய்யும் விவசாயிகளை போலவே காட்சியளித்ததுடன் தாங்கள் இயக்கத்துடன் சம்பந்தபலாகுவது போல் நடந்து கொண்டனர் இவர்கள் யார் என்பதை புரிந்து கொண்ட பாஸ்டியன் பிள்ளை நானும் இவர்கள் ஏக்கத்துடன் சம்பந்தப்படாதவர்கள் என்ன நம்புவதாக நடித்து இவர்களை தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார்.

தகுந்த சந்தர்ப்பம் ஏற்பட்டபோது பஸ்தியா பிள்ளையும் அவரது சகாக்களும் அங்கேயே கொல்லப்பட்டனர்.

பஸ்தியாம் பிள்ளை தொடர்ந்து அவருடன் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டதுடன் அவருக்கு தகவல் கொடுத்தவர்கள் பற்றியும் அறிய முடிந்தது. இவருக்குதகவல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் செட்டி தனபாலசிங்கம் என காணப்பட்டார்.

1978 அக்டோபர் 7 ஜே ஆர் ஜெயவர்த்தனா இரண்டாவது குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படுவது எதிர்க்கும் நோக்கில் இரத்மலானை விமான நிலையத்தில் அவரோ விமானத்தைக்LTTE யால் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான டைம் பாம் தயாரிக்கும் பொறுப்பை உமா மகேஸ்வரனும் அதை விமானத்தில் வைக்கும் பொறுப்பே சுப்ரமணியம் பேபி ஏற்றனர் அதைராகவன் வெற்றிகரமாக செயல்படுத்தினார்.l

     புலிகள் இயக்கம் தனி அமைப்பாக இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தது. இக்காலத்தில் கூட்டணி அமைப்பினரின் மிதவாத போக்கே பிடிக்காத பல இளைஞர்கள் இளைஞர் பேரவையிலிருந்து விலகினார்கள் இவர்களில் சந்ததியார் இரா. வாசுதேவா இறைகுமாரன் யோகநாதன் முத்துக்குமாரசாமி வரதராஜ பெருமாள் குமரன், பத்மநாபா போன்றோர் முக்கியமானவர்களாக இருந்தார்கள்


தமிழிலே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு


கியூபா மாநாட்டுக்கு பின்னர் அரசினால் தேடப்பட்ட உருமிளா தேவியை பிரபாகரன் இந்திய அனுப்பி வைத்தார் . உருமிளாதேவி இந்தியா சென்றதும் இந்தியாவில் உள்ள புலிகள் அலுவலகப் பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் அலுவலக பொறுப்பை கையேற்றதும் ஒவ்வொருவருடைய வேலைகளையும் ஒழுங்கமைத்தார் இதனால் இவர் அலுவலகத்துக்கு பொறுப்பாக இருப்பதை நான் ராஜா விரும்பவில்லை அவருக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

நாகராஜா குடியேற்றங்கள் வெகுஜன வேலைகளுக்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்உமா மாமேஸ்வரன் புணர்வாழ்வு வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார் பிரபாகரன் எப்போதும் ராணுவத்திலேயே கவனம் செலுத்தி வந்தார் ராணுவ நடவடிக்கைகளில் தன்னைவிட யாரும் முன்னணியில் நிற்பதை இவர் எப்போதும் விரும்பியது கிடையாது. இந்த ரீதியிலேயே கிழக்கு மானத்தைச் சேர்ந்த மைக்கேல் , பட்குணரஜா ஆகிய இருவரும் உமா மகேஸ்வரன் லெபனான் பயிற்சியில் இருந்த காலத்தில் பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.


1. பட்குணரசா என்ற சரவணன் ஆரம்பகால உறுப்பினர் எல்லா வகையான வாகனங்களும் ஓட்ட பயிற்சி பெற்றவர் இயக்கத்தை மக்கள் அமைப்பாக மாற்ற வேண்டும் என முயற்சி எடுத்தவர் இவர் நாகராசா தங்கராசா ஆகிய இருவராலும் தந்திரமாக ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது பிரபாகரனால் மறைந்திருந்து சுட்டு கொலை செய்யப்பட்டார்


2.  மைக்கல்  மட்டக்கிளப்பில்இருந்து புறப்பட்ட முதல் போராளி.. கிழக்கு மாகாணத்தை தலைமை தாங்க கூடிய திறமை பெற்றவர் ஆயுதங்களே கையாள்வதில் மிகவும் சிறந்தவர் இவர் 1976 இல் பிரபாகரனால் கொல்லப்பட்டார்


இந்த கொலைகலே  புலிகள் இயக்கத்தில் நடந்த முதல் உட்கொலைகள் ஆகும். இக் கொலைகள் வெளியே தெரிய வந்தபோது இவர்கள் அமைப்புக்கு துரோகம் செய்ததாக பிரபாகரன் குற்றம் சாட்டினார். அதே நேரம் பிரபாகரன் தலைமைக்கு ஆசைப்பட்டதாக நாகராஜா குற்றம் சாட்டினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அரசியல் நடவடிக்கை சில புலிகள் இயக்கத்தின் முரண்பாடுகளை வளர்க்கத் தொடங்கின தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பது என புலிகள் இயக்கதில் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து கூட்டணிக்கு எதிராக உமாமேஸ்வரனார் எழுதி அச்சிடப்பட்டு இந்தியாவிலிருந்து பிரபாகரன் மூலம் குடநாட்டுக்கு துண்டு பிரசுரங்கள் அனுப்பப்பட்டன ஆனால் இந்த துண்டு பிரசுரம் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் காசி ஆனந்தன் ஆகியோரின் வேண்டுகோளை அடுத்து பிரபாகரனால் எரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்காமல் தடுக்கப்பட்டது அக் காலகட்டத்தில் பிரபாகரன் அமிர்தலிங்கம்அவர்களின் செல்ல பிள்ளையாகவே விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


உமா மகேஸ்வரனின்கூட்டணிக்கு எதிரான போக்கு பிரபாகரனின் சுத்த ராணுவ கண்ணோட்டம் ஊர்மிளா தேவிக்கு எதிரான நா ராஜாவின் போக்கு எல்லாம் உள் முரண்பாடுகளை தோற்றுவித்தது.


தொடர்ந்து மத்திய சபை உறுப்பினர்கள் சிலரிடம் உமா கணக்கு விபரங்கள் கேட்டதை தொடர்ந்து இவர்களால் இந்த முரண்பாடு வளர்க்கப்பட்டது இதைத் தொடர்ந்து  உமாமாமேஸ்வரனுக்கும் ஊர்மிளா தேவிக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இது புலிகள் இயக்கத்தின் சட்ட விதிகளுக்கு விரோதமென குற்றம் சாட்டப்பட்ட போது உமா மகேஸ்வரன் இயக்கத்தில் இருந்து வெளியேறினார் பின்னர் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது பிரபாகரன் திருமணம் செய்த போது இதே வாதங்களை முன்வைத்து ராகவன் பிரபாகரன் மேல் குற்றம் சாட்டிய போது ராகவன் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உமாவின் வெளியேற்றத்தில் பின்னரும் புலிகளில் இருந்த இரண்டு நிலை மீண்டும் பாரிய உடைவிக்கு வழி வகுத்தது

அவை 1. TULF ஆதரவுடன் ஆன வளர்ச்சி போக்கு

              2. மக்கள் அமைப்புக்கள் மூலம் மக்களை ஒரு போராட்டத்துக்கு தயார் செய்தல் ஆகிய இரண்டு நிலைகளும் ஆகும்.


பிரபாகரன் ராணுவ ரீதியாக சிந்திப்பவராக கூட்டணியைச் சார்ந்தும் அப்பொழுது விளங்கினார் ஆனால் சுந்தரம் கண்ணன் போன்றோர் மக்கள் அமைப்புகள் மூலம் மக்களை ஒரு போராட்டத்திற்கு தயார் செய்ய வேண்டும் அரசியலுக்காக இராணுவம் என்ற கோட்பாட்டை கொண்டு இருந்தனர் இதனால் இவர்களிடையே கருத்து வேறு கடுமையாக வளர்ந்து சுந்தரம் கண்ணன் காத்தான் செல்லக்கிளி அம்மான் நா ராஜா ஐயர் போன்ற பலர் இயக்கத்தில் இருந்து வெளியேறினார்கள். இவர்கள் வெளியேறிய போது புலிகள் இயக்கத்தின் ஆயுதங்கள் சுந்தரத்திடமே இருந்ததால் பிரபாகரன் அவர்களுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டார். இதன் காரணமாக இரு பகுதியினரும் உடன் பாட்டுக்கு வந்தனர். அதன்படி இரு பகுதியினரும் தமிழக விடுதலைப் புலிகள் என்ற பெயரை பாவிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டது அடுத்து சுந்தரம் குழுவினர் தங்களிடமிருந்து ஆயுதங்களை பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். இப்படி ஆயுதங்களைப் பெற்ற பிரபாகரன் பின்னர் சுந்தரம் குழுவினர் ஆயுதங்களை கையாடிக் கொண்டு வெளியேறியதாகவும் அதற்காக மரண தண்டனை எனவும் சுந்தரமும் கொல்ல்லப்பட்ட போது உரிமை கோரியமை குறிப்பிடத்தக்கது.


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இரண்டாக பிரிந்ததும் முன்னர் இயக்கத்தில் இருந்து வெளியேறிய உமா மகேஸ்வரன் உடன் தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளை பிரபாகரன் மேற்கொண்டார் ஆனால் சந்ததியாகரின் முன் முயற்சியில் காரணமாக சுந்தரம் குழுவினர் 1980 அக்டோபரில் உமா மகேஸ்வரனை தம்முடன் இணைத்துகொள்வதில் வெற்றி கண்டனார்.


சுந்தரம் குழுவினருடன் உமா இணைந்ததை தொடர்ந்து பிரபாகரன் தங்கதுரை குட்டிமணி போன்றவர்களிடம் இணைந்து கொண்டார். அக்காலகட்டத்தில் தமிழ் தீவிரவாத குழுக்கள் மேற்கொண்ட சகல நடவடிக்கையும் மக்கள் புலிகள் செயல்பாடு ஆகவே கருதினர்.


தொடரும் பகுதி 10







logoblog

Thanks for reading பகுதி 9 சிதைந்த சிந்தாதங்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment