குட்டிமணி தங்கத்துரை குழுவுடன் பிரபாகரன் இணைந்து கொண்ட பின்னர் அவர்களின் நடவடிக்கைகள்.
1981 குறும்பசிட்டி வன்னிய சிங்கம் நகை அடகு கடை கொள்ளை பங்குபெற்றியூர் தங்கதுரை குட்டிமணி பிரபாகரன் ஸ்ரீ சபா ரத்தினம் ஆகியோர்
1981 செட்டி தனபால சிங்கம் கொலை குட்டிமணி
1982 நீர்வேலி வங்கி கொள்ளை 82 லட்ச ரூபாய் குட்டிமணி தங்கதுரை பிரபாகரன் ஓபராய் தேவன்ஆகியோர்
குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டது அடுத்து அப்போது ராகவன் தலைமையில் இயங்கி வந்த LTTE யுடன் மீண்டும் பிரபாகரன் இணைந்தார் பின்னர் செல்லக்கிளியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.உமா சுந்தரம் குழுவினர் ஆனைகோட்டை போலீஸ் நிலையத்தை தாக்கியதை அடுத்து,LTTE தாங்களும் ஒரு போலீஸ் நிலையத்தை தாக்க வேண்டும் என்பதற்காக சாவுகச்சேரி போலீஸ் நிலையத்தை தாக்கினார் இந்த தாக்குதலில் ஆசீர் ஆண்டனி, செல்லக்கிளி அம்மாள் சங்கர் ஆகியோர் முன்னென்று நடத்தினர் இந்த போலீஸ் நிலையம் 1984 இல் TELO நீர் மூலமாக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில் உமா சுந்தரம் குழுவினர் ஒரு மக்கள் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதன் ஆரம்ப கட்டமாக புனர் வாழ்வு வேலைகளில் ஈடுபட்டனர்புலிகள் இயக்கத்தில் உமா இருந்த காலத்தில் நெடுங் கேணியில் அகதிகள் புணர்வாழ்வு கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட கென்ட் ஃபார்ம், டொலர் விவசாய பண்ணைகளில் புனர்வாழ்வு நடவடிக்கைகளும் ஈடுபட்டு வந்தார். இவ்வாறான செயல்பாடுகளுக்கு 1947 அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தில் முக்கிய பங்கு கொண்டு வேலை இழந்த போராளியான காலஞ்சென்ற கே சி நித்யானந்தன் அவர்களின் உதவி பெருமளவில் உமாவுக்கு கிடைத்தது.
இதே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வவுனியாவில் கட்டிடக்கலைஞர் எஸ் ஏ டேவிட் அவர்களை தலைவராகவும் 1983 ஆம் ஆண்டு ஜூலை வெளிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் ராஜசுந்தரத்தை அமைப்பாளராகவும் கொண்டு இயங்கிய காந்தியும் அமைப்பின் ஊடாக உமா குழுவினர் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
புனர்வாழ்வு நடவடிக்கைகள் நடைபெறும் அதே வேலை தமது கருத்துக்களே மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்குடன் புதிய பாதை என்ற மாத பத்திரிகையும் இவர்கள் வெளியிட்டனர்
1981 ஜூலை மாதம் ஆயுதம் சேகரிக்கும் நோக்குடன் உமா குழுவினர் ஆனைக்கோட்டை போலீஸ் நிலைய தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்து அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றினார் தமிழ் போராளி குழுக்கள் மேற்கொள்ளப்பட்ட முதல் போலீஸ் நிலைய தாக்குதல் இதுவாகும்.
LTTE கு ஆதரவாக டி சிவக்குமாரன் பிஎஸ்சி உணர்வு என்ற பத்திரிகை நடத்தி வந்தார்.
மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்
இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஸ்ரீலங்கா அரசு மாவட்ட அபிவிருத்தி சபை என்ற தீவை முன் வைத்தது அதனை தமிழர் விடுதலை கூட்டணி ஏற்றுக்கொண்டது. இம் மாவட்ட சபையை பின்னர் எதிர்த்த தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் அவர்களும் இதை ஆரம்பித்தில் ஆதரித்தவரே ஆனால் இளைஞர்கள் மத்தியில் இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது.
மாவட்ட அபிவிருத்தி சபையையும் அதற்கு ஆதரவு வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியையும் மிகக் கடுமையாக கண்டித்து புதிய பாதை கட்டுரைகளையும் கார்ட்டூன் களையும் வெளியிட்டு வந்தது அது மாத்திரமில்ல புதிய பாதை குழுவினர் மாவட்ட சபைக்கு எதிராக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலுக்கான பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன பல கூட்டங்கள் இளைஞர்களால் குழப்பப்பட்டன தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி கடைசி பிரச்சாரக் கூட்டம் நாச்சிமார் கோவில் அடியில் அதாவது 81 மே 31 ஆம் தேதி நடைபெற்றது இக்கூட்டத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பேரினவாத அரசு படைகள் நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பல கடைகள் வீடுகளில் எரித்து பலரை சுட்டுக் கொன்றனர். இந்த வன் செயல்களின் போதே யாழ் பொது நூலகம் ஈழநாடு பத்திரிகை காரியாயம். யாழ். MP யோகேஸ்வரன் வீடு ஆகியவனமும் எரிக்கப்பட்டன பழைய பொதுச் சந்தையும் சந்தர்ப்பத்தில் எரிக்கப்பட்டது நாச்சிமார் கோவில் கூட்டத்தில் போலீசாரை சுட்ட சம்பவத்தில் ரோபோட் மாணிக்கம் தாசன் உமா காத்தான் ஈடுபட்டிருந்தனர் . முன்பு சுதந்திரக் கட்சி ஆதரவாளராக விளங்கிய முன்னை நாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் தியாகராஜா அவர்கள் பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் பட்டியலில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட போது அவரும் சுட்டுகொல்லப்பட்டமே இங்கு குறிப்பிட வேண்டும்.
மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டு இருந்த தமிழ் மக்கள் நாச்சிமார் கோயிலடி சம்பவத்தை அடுத்து ஸ்ரீலங்கா போலீசார்னதும் ராணுவத்தினரதும் அழித்து ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க நோக்குடன் பெருமளவில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த மையம் இங்கு குறிப்பிட வேண்டும்
சுந்தரம் கொலை
தமிழர் விடுதலைக் கூட்டணியினரை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் புதிய பாதையில் வெளியிட்டு வந்த காரணத்தால் அமிர்தலிங்கம் புதிய பாதை குழுவின் குழுவினரிடம் உமா சுந்தரம் சந்ததியர் கண்ணன் கோபம் கொண்டிருந்தார் இதனால் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள் கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்வதே கைவிடும்படி சுந்தரத்தை வேண்டினார் இதனால் அமுதலிங்கம் அவர்களை விமர்சிப்பதை தவிர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சனம் செய்து கட்டுரைகள் வெளிவந்தன கூட்டணியே விமர்சிப்பதையும் ஏற்றுக் கொள்ளாத திரு அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியும் உயர்மட்ட குழு கூட்டத்தில் புதிய பாதை பத்திரிகையெய் எப்படியாவது வெளிவராது தடுப்பதாக கூறியிருந்தார். இதை எடுத்து சில நாட்களின் 2/01/1982 சுந்தரம் சித்ரா அச்சகத்தில் பிரபாகரன் குழுவினரால் கொலை செய்யப்பட்டார் இந்த காலகட்டத்தில் பிரபாகரன் அமுதலிங்கம் அவர்களின் செல்ல பிள்ளையாகவே செயல்பட்டார் என்பது முக்கியமானதாகும்
பகுதி 9 தொடரும்
No comments:
Post a Comment