அதேபோன்று யாழ் போலீஸ் நிலையத்தின் மீதும் மெல்லியடி மத்திய மகா வித்தியாலத்திலும் முகாம் இட்டிருந்த ஸ்ரீலங்கா ராணுவத்தின் மீதும் குளியல் மேற்கொண்டு அதிரடி தாக்குதல்களையும் மறந்து விட முடியாது.
இவை யாவும் வெவ்வேறு விதத்தில் தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தை ஒருமைப்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றின என்பது அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
இவ்வாறு பல்வேறு விதமாக செயல்பட்டு இயக்கங்கள் அந்நிய சக்திகளை நம்பி இருக்காது தமது சொந்தக் காலில் நின்று செயல்பட்டு இருந்தால் இன்று தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் ஏக்க பெருமூச்சம், நாளை எப்படி இருக்கும் என ஜோதிடம் பார்க்கும் மனநிலையும் இருந்திருக்காது.
எந்த மக்களின் விடுதலைக்காக போராட முற்பட்டார்கள் அந்த மக்களின் சக்தியில் நம்பிக்கை வைக்காது அந்நிய சக்திகளின் ஆதரவில் அவர்களின் வழிகாட்டலில் இயக்கங்கள் தங்கி நிற்க முற்பட்டமேயே தமிழ்ல போராட்டம் பெருமளவு பின்னாடிய காரணமாக விளங்கியது இயக்கங்கள் மத்தியில் நிலவிய தெளிவற்ற அரசியல் நிலைப்பாடும் தந்திரோபாய ரீதியில் காணப்பட்ட தவறுகளும் நண்பன் யார் எதிரியார் என நிர்ணயிப்பதில் உங்கள் நிலை தடுமாறியதும் இந்த பின்னடைவுக்கு பெரிதும் துணை போயின ஒவ்வொரு இயக்கமும் மற்றைய இயக்கத்தை அல்லது இயக்கங்களை தம்முடைய முதல் எதிரியாக கருதியது மாத்திரமல்ல அரசு இயந்திரத்தைப் பற்றி சரியான கணிப்பீடு இல்லாததும் இயக்கங்களின் பின்னடைவுக்கு காரணமாக விளங்கியது.
சகல இயக்கங்களும் இதய சுத்தியுடன் தமது தவறுகளே சுய விமர்சன ரீதியில் அணுகி அவற்றை திருத்திக் கொள்ளும் இடத்து தமிழ் மக்களின் எதிர்காலம் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய படைகள் வெளியேறியதே தொடர்ந்து நடத்திய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தமது இயக்கம் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை தமது இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பிரச்சினையை தீர்த்து வைப்பார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இது மீண்டும் தமிழரின் நிலை பழைய நிலையிலேயே உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுதான் ரகசிய மாக பேசியது தவறு என்று விமர்சிக்கப்பட்டது வாக்குறுதியை நம்பி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதாக கூறப்பட்டது ஆனால் இன்று புலிகள்….,
தமிழ் இயக்கங்களின் முக்கிய செயல்பாடுகள்
LTTE தமிழீழ விடுதலைப் புலிகள்
சாவகச்சேரி போலீஸ் நிலையத்தை தாக்கி ஆயுதம் அபகரிப்பு. பின்னர் இந்த போலீஸ் நிலையம் TELO வால் முற்றாக அழி க்கப்பட்டது
கந்தர் மடம் பாடசாலையில் தேர்தல் வாக்களிப்பு நிலையம் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டிருந்த போலீசார் மேல் தாக்குதல்
திருநெல்வேலி கன்னிவெடி தாக்குதல் 13 ராணுவம் கொலை 1983 ஜூலை
அனுராதபுரம் அருந்தலாவை அப்பாவி சிங்கள மக்கள் மேல் தாக்குதல் நூற்றுக்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர்
மதவாசி போலீஸ் நிலையம் தாக்குதல்
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த ராணுவத்தினர் மேல் கார் குண்டு தாக்குதல்
யாழ் போலீஸ் நிலையம் மேல் தாக்குதல். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன
ஒட்டிச்சுட்டான் போலீஸ் நிலையம் தாக்குதல்
TELA தமிழ் ஈழ விடுதலை இராணுவம்
யாழ்கோண்டாவில் ரயில் நிறுத்தத்தில் யாழ்தேவியை நிறுத்தி தீ வைத்து கொளுத்தினர்.
TEA தமிழ் ஈழ ராணுவம்
காத்தான்குடி வங்கிக் கொள்ளை
கிளி நொச்சி போலீஸ் நிலையம் மீது தாக்குதல்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டு வைப்பு
PLOTE தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தை தாக்கி ஆயுதம் கைப்பற்றப்பட்டது
கிளிநொச்சி வங்கிக் கொள்ளையும் ராணுவத்தினர் மேல் தாக்குதலும்
குறிக்கட்டுவான் காவல் படை மீதான தாக்குதல் ஆயுதம் கைப்பற்றல்
நாச்சிமார் கோவில் அடியில் போலீஸ் மீதான தாக்குதல் போலீசார் கொலை
வவுனியாவில் விமானப்படை வீரர் மீதான தாக்குதல்
வவுனியா எஸ் பி குண்டு வைத்து கொலை
தென்னிலங்கில் உள்ள நிக்கிற வெட்டி என்ற இடத்தில் வங்கிக்கொள்ளையும் போலீஸ் நிலைய தாக்குதலும்
செட்டிகுளம் என்ற இடத்தில் இலங்கை ராணுவத்தினர் மீது தாக்குதலும் ஆயுதம் கைப்பற்றும் 1988
தமிழில எல்லை புறமான வில்பத்து காட்டில் உள்ள பளுக்காத்துரை இலங்கை ராணுவ முகாம் அழிப்பு
வில்பத்து காட்டில் உள்ள ஸ்ரீலங்கா ராணுவ முகாம் அழிப்பு 1989
மாலைத்தீவு புரட்சி ஆனால் புளொட் இதை மறுத்துள்ளது இது இந்திய தலையிட்டால் தோல்வியில் முடிந்தது இதில் TELA வும் பங்கு பெற்றினர்
EPRLF ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சி
வவுனியா ரோந்து படையினர் மீதான தாக்குதல்
அம்பாறை மாவட்ட போலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல் 1989
சிதைந்த சித்தாந்தங்கள் முடிவு பெற்றது.
இது 19 90 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் வைத்து எழுதப்பட்ட ஓர் சிறு புத்தகம். இது புளொட் இயக்கத்தினர் எழுதி இருக்கிறார்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு அப்போது புளொட் இயக்கம் தலைவர் பற்றிய உண்மையான நிலை தெரிந்திருக்காது. இதில் சந்ததியர் கொலை மற்றும் கொலைகள் பற்றிய விமர்சனம் இல்லை.
நன்றி சமூக விஞ்ஞானக் கலை இலக்கிய கழகத்திற்கு
No comments:
Post a Comment