பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 13 July 2023

பகுதி 10 சிதைந்த சித்தாந்தங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 13 July 2023

தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்PLOTE


மக்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த புதிய பாதை குழுவினர் மக்கள் அமைப்பை ஏற்படுத்தும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தி அந்த பேரில் பொங்கல் வாழ்த்து மடல் நத்தார் வாழ்த்து மடல் ஆகியன அச்சிட்டு விநியோகித்தனர் இத்துடன் விவசாயிகளுக்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தி 1981 மே மாதம் வவுனியாவில் மாபெரும் ஊர்வலங்கள் உடன் மே தின கூட்டம் ஒன்றை நடத்தினர் 1982ஜனவரி சுந்தரம் கொலையை தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணை அடுத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பகிரங்கமாக இயங்க முடியாமல் பின்னர் ERA வாசுதேவாவை அமைப்பாளராக கொண்ட தமிழில விடுதலைக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது இந்த அமைப்பின் ஊடாக 1982 83 ஆண்டுகளில் ஒரே மட்டக்களப்பு திரு கோனமலை ஆகிய இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது.


1982 மே மாதம் பாண்டி பஜாரில் பிரபாகரன் உமா மகேஸ்வரனை சுட முயன்ற சம்பவத்தை அடுத்து லங்கா ராணி நாவலை எழுதிய அருளர் இயக்கங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார் அப்போது ஒற்றுமை முயற்சியில் தாங்கள் ஒற்றுமைக்கு வர தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க பெயரை தனக்கு உமா விட்டு தர வேண்டும் என்று நிபந்தனை போட்டதை அடுத்து அந்தப் பெயர் பிரபாகரனுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழிலே விடுதலைக் கழகம் அரசியல் அமைப்பாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் PLOTE ராணுவ அமைப்பாகவும் செயல்பட தொடங்கின. தமிழீழ விடுதலைக் கழகத்தின் பிரச்சார ஏடாக விடுதலை என்ற மாத பத்திரிகையும் 1983ல் வெளிவந்தது.


1983 ஜூலை இன கலவரத்தை தொடர்ந்து இலங்கைவாழ் தமிழ் மக்கள் தங்களை பாதுகாக்க இந்தியா வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு இருந்தனர் இயக்கங்கள் மத்தியில் கூட இவ்வித எண்ணங்கள் நிலவியது. ஆனால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் PLOTE தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி NLFT ஆகிய இரு இயக்கங்கள் மாத்திரமே இந்தியாவின் நேரடி தலையிட்டு ஆதரிக்கவில்லை.


அந்நிய ராணுவம் ஒன்றின் வருகை நாள் ஏற்படக்கூடிய அழிவை வங்கம் தந்த பாடம் என்று நூலைPLOTE வெளியிட்டதன் மூலம் தமிழ் மக்களை முன்கூட்டியே எச்சரித்து இருந்தது அந்நூலின் முன்னே கிழக்கு பாகிஸ்தானில் விடுதலைப் போரில் இந்திய படையினர் ஈடுபட்டதனால் வங்காளதேஷ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அழிவுகள் எடுத்து விளக்கப் பட்டிருந்தது


1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த நாட்டுக்கு வந்த இந்திய படையினரின் செயல்பாடும் தமிழ் மக்கள் ஏற்பட்ட இழப்பும் PLOTE,NLFT ஆகியன மேற்கொண்ட நிலைப்பாடு தொலைநோக்குடன் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்பது நிரூபித்தனர்.


1984 இல் இந்தியாவுடன் நல்லுறவு இல்லாத நிலையில் PLOTE இயக்கம் சென்னை துறைமுகத்தின் ஊடாக ஆயுதம் இறக்க முயன்ற போது நாலு கோடி இந்திய ரூபாய் பெருமதியான ஆயுதங்கள் இந்திய சுங்கப் பகுதி என்றால் கைப்பற்றப்பட்டது இந்த ஆயுதங்களை இந்தியா தங்களுக்கு தந்ததாக புலிகள் இயக்கத்தினார் பெருமையாக கூறிவந்தனர்.


ஆயுதங்கள் அற்ற நிலையிலும் கூட தமிழ்ல மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பங்களிப்பினை செலுத்த தவறவில்லை 1985இல் சிங்கள பேரினவாத ஆட்சி அதிகாரத்துக்குட்பட் பிரதேசமான நிக்கர வெட்டியா போலீஸ் நிலைய தாக்குதலை நடத்தியதன் மூலம் வடகிழக்கில் மாத்திரம் அல்ல ஸ்ரீலங்கா அரசின் அரச இயந்திரத்துக்கு தென்னிலங்கினும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை உணர்த்தியது புளொட்இயக்கமே ஆகும்.


ஆயுதங்கள் மிககுறைவாக இருந்த பொழுதும் 1987 1988 காலப்பகுதியில் தமிழ் பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டிருந்த இருந்த ஸ்ரீலங்கா ராணுவ முகாம்கள் ஆன பளுக்காற்றுறை களுவில் ராணுவ முகாம்கள் புளொட் டால் அழிக்கப்பட்டன. இவை வில்பத்துகாடுகளில் உள்ளன.


தென்னிலங்கே தீவிரவாத இயக்கமான ஜேவிபி இயக்கத்துக்கு பயிற்சி ஆயுதம் போன்ற உதவிகள் புளொட் வழங்கி வருவதாக சந்தேகம் கொண்டிருந்த இலங்கை அரசு மேற்படி சம்பவங்களை அடுத்து பழிவாங்க தருணம் பார்த்திருந்தது இச்சந்தர்ப்பத்தில் அரசுடன் புலிகள் பேசத் தொடங்கியதும் புலிகளை பாவித்து  புளொட் முள்ளிகுள முகாமை20/05/89 தாக்கினார். இந்த தாக்குதலுக்கு இலங்கை கடற்படை ஆறு படகுகள் மூலம் புலிகளை ஏற்றி முள்ளி குளத்தில் இறக்கியதோடு ராணுவ உதவியும் கொடுத்தது.


1985 86 காலப்பகுதிகளில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் பொதுமக்கள் கூடும் பஸ் நிலையம் நவீன சந்தை வைத்தியசாலை போன்ற இடங்களில் பாதுகாப்பு அரன்களை அமைப்பதிலும் புளொட் ஆற்றிய பங்கினை மக்கள் மறந்து விடவில்லை.


1987 இல் மட்ட கிளப்பில் புளொட் முக்கிய உறுப்பினர்களான வாசுதேவ கண்ணன் சுபாஷ் உட்பட பலரை புலியல் இயக்கத்தினை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து கொலை செய்த போதும் பின்னர் முகாம்களை தேடி அளித்த போதும் புளொட் அவர்களுடன் ஆன மோதலை தவிர்த்து வந்தது இந்த நேரம் இந்தியப் படைகளும் புலிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.


பின்னர் இந்திய படையினரும் விடுதலைப் புலிகளும் மோதிக்கொண்ட போது புலிகள் மேலான தாக்குதலே நிறுத்தும்படி உமா மகேஸ்வரன் பகிரங்க அறிக்கை விட்டதுடன் இந்திய படைகளின் நடவடிக்கைகளை கண்டித்து வவுனியாவில் பரந்தளவில் பொதுமக்கள் உண்ணாவிரத நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் அதன் காரணமாக தமிழின மக்கள் விடுதலை கழக அங்கத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்திய படையினரால் கைது செய்யப்பட்டு கடைசி வரை காவலில் வைக்கப்பட்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1983ல் இடம்பெற்ற மட்டக்களப்பு சிறை உடைப்பின் போது அனைத்து இயக்கத் தோழர்களும் என ஒருங்கிணைந்து செயல்பட்டமை ஆளையே வெற்றிகரமாக அதனை சாதிக்க முடிந்தது அதேபோன்று 1986க்கு முன்னர் சகலை இயக்கத்தவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றியமையாலேயே ஸ்ரீலங்கா ராணுவம் தமது முகாம்களை விட்டு வெளியே வர முடியாத நிலையில் வைக்கப்பட்டிருந்தனர் அந்த நிலைமை மாறி மற்ற இயக்கங்கள் புலிகளால்தடை செய்யப்பட்ட பின்னரே 1987-ல் ஸ்ரீலங்கா அரசினால் வடமாராட்சி தாக்குதல் உட்பட இனிய தாக்குதல்களை மிக இலகுவாகமேற்கொள்ள முடிந்தது.


தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் இயக்கங்கள் அனைத்துமே பல்வேறு விதத்தில் பங்காற்றின என்பதை எவரும் மற க்கவோ மறுக்கவோ முடியாது.


தமிழ் மக்களின் பொருட்களைக் கோயில் கொள்ளை அடித்துக் கொண்டு யாழ் தேவி புகையிரதத்தில் பயணம் செய்த நூற்றுக்குக்கான ஸ்ரீலங்கா ராணுவத்தினரை அழித்த முறிகண்டி  புகையிறத சாவகச்சேரி போலீஸ் நிலையத்தை முற்றுமுழுதாக அழித்த அதிரடி தாக்குதலையோ அதனை  முன் நின்று நடத்திய TELO இயக்கத்தையோ அதனைச் சார்ந்த தோழர்களையோ மறக்க முடியாது.


அதேபோன்று ஸ்ரீலங்கா அரசின் ஆதிக்கத்தை உடைத்து தெறியும் விதத்தில் ஈழ முத்திரையை வெளியிட்டு தங்கள் இயக்கம் புலிகளால் தடை செய்யப்படும் வரை அந்த முத்திரையிலேயே வடக்கு கிழக்கில் உபயோகத்தில் வைத்திருந்த EPRLF இயக்கத்தின் செயல்பாட்டையோ குறிப்பாக மலையக மக்களும் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களில் ஒரு அங்கம் என்பதே எடுத்துக்காட்டு முகமாக கொழுந்து பறிக்கும் கூடை உள்ள பெண்ணின் படத்தைப் பறித்த முத்திரை வெளியிட்டு உபயோகத்தில் வைத்திருந்த ஆவியக்கத்தின் செயல்பாட்டையும் மறந்து விட முடியாது.


தொடரும் பகுதி 11

logoblog

Thanks for reading பகுதி 10 சிதைந்த சித்தாந்தங்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment