இடைக்கால நிர்வாகம்
இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய படையின் பாதுகாப்புடன் இந்திய விமானத்தில் மூலம் யாழ் வந்து சேர்ந்த பிரபாகரன் சுதுமலை கூட்டத்திற்கு கூட இந்திய படையின் பாதுகாப்பிலேயே வந்தார் அன்று புலிகள் இயக்கத்திற்கும் இந்திய அரசுக்கும் இருந்த ஒற்றுமை எடுத்துக்காட்ட இதுவே போதுமானதாகும்.
1987 செப்டம்பர் 28ஆம் தேதி திரு .பூரி, மாத்தையா ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இடைக்கால நிர்வாக அமைப்பு பற்றிய உடன்பாடு காணப்பட்டு ஒப்பந்தமும் கைசாதிடப்பட்டது. புலிகளின் சார்பில் மாத்தையா கையொப்பமிட்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி 11 பேரைக் கொண்ட இடைக்கால நிர்வாகத்தில் ஆறு பேர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்களாகவும் இருவர் அரசாங்கப் பிரதிநிதிகளாகவும் ஒருவர் முஸ்லிம் பிரதிநிதியாகவும் இருப்பர் என தீர்மானிக்கப்பட்டது
இந்த அடைக்கால நிர்வாகத்துக்கு தலைவராக ஒருவரை நியமிக்க மூவரின் பெயரை பிரேரிக்கும்படிஇலங்கை அரசு கேட்டபோது, புலிகள் இயக்கம் தகுதியான உறுதியான தமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய மூவரின் பெயரை கூறிஇருந்தால் பின்னர் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு இடமில்லாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் புலிகளோ ஜே.ஆரின் செல்ல பிள்ளையான முன்னை நாள் யாழ் மாநகர சபை ஆணையாளரான திரு சிவஞானத்தின் பெயரையும அந்த மூவரில்ஒருவராக கூறவே ஜே ஆர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தனக்கு வேண்டியவரான சிவஞானத்தையே தலைவராக நியமித்தார் அதனை உடன் வரவேற்று தொலைபேசி மூலம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த பிரபாகரன் பின்பு ஏற்பட்ட உன் பிரச்சினையால் சிவஞானம் அவர்களை மாற்றி திரு பத்மநாபனை நியமிக்க முற்பட்டதும் அதனால் இடைக்கால நிர்வாக அமைப்பு இல்லாமல் போனதும் அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகளும் தற்போதைய வரலாறாகும்.
அன்று அந்த இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பாக ஏற்றிருந்தால் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலையை தவிர்த்து இருக்கலாம்.
புலிகள் மன்னிப்பு கடிதம் பெற்றமை
புலிகள் இயக்கம் என்றுமே எதுமே தவறு செய்யவில்லை என்ற ஒரு மாயை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது இடைக்கால நிர்வாகத்தில் மாத்திரம் இன்றி மற்றும் பல கோட்பாடு ரீதியான பிரச்சினைகளிலும் அவர்கள் தவறிழைத்துள்ளார்கள் குறிப்பாக சொல்வதனால் அவர்கள் கொண்ட லட்சியத்திற்கே மாசு கற்பிக்கும் தவறு புரிந்துள்ளனர்
அடக்குமுறைக்கு எதிராக போராடிய தமிழினத்தின் மேல் சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை அடுத்து தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏத்தினர் புலிகள் இயக்கமும் அவ்வாறே ஆயுதம் ஏந்திய குழுக்களில் ஒன்றாகும் தமிழ் இளைஞர்களும் இயக்கங்களும் நடத்திய போராட்டம் நியாயமானது என இன்று சிங்கள தலைவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் அன்று ஜே ஆர் ஜே வர்த்தனா தனது தவறே ஏற்றுக் கொள்ளாத நிலையில் தமது அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு மனம் வருந்தாத நிலையிலேயே இலங்கை இந்தியா ஒப்பந்த அடிப்படையில் புலிகளை இயக்கம் ஆயுதங்களே கையெழுத்து இலங்கை அரசிடம் இருந்து மன்னிப்பு கடிதம் பெற்றுக் கொண்டது அதன் மூலம் தன் நடத்திய போராட்டமே தவறானது என ஒத்துக் கொண்டார்கள் என்ற நிலை உருவாகியது.
தவறு செய்தவன் தான் மன்னிப்பு கேட்பான் ஆனால் தமிழ் மக்களோ அவர்களின் முன்னணி படையாக விளங்கிய இளைஞர் இயக்கங்களோ போராளி குழுக்களோ தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களுக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடினார்கள் அதில் எவ்வித தவறும் கிடையாது.
இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை தொடர்ந்து இலங்கை அரசின் மன்னிப்பு பெறாத காரணத்ததாலேயே PLOTE செயல் அதிபர் அமரர் உமா மகேஸ்வரன் அவர்களுக்கு இலங்கை உயர்நீதிமன்றத்தால் 17 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதுபோல் EPRLF இயக்க தலைவர் பத்மநாபாவும் மன்னிப்பு கேட்க மறுக்கின்ற காரணத்தால் அவரை கைது செய்யும் படியான உயர்நீதிமன்ற ஆணை இன்றும் செயல்படுத்தப்பட உள்ளது.
புலிகள் இழைத்த தவறுகள் இதை மட்டுமல்ல தென்னிலங்கை அரசினால் நடத்தப்படும் சகல பரீட்சைகளையும் பகிஷ் கழிக்க வேண்டும் என 1987ல் ஆரம்பத்தில் தன்னிச்சையாக தீர்மானித்தது தமது தீர்மானத்துக்கு ஆதரவாக பலாத்காரமாக மாணவர் ஊர்வலம் ஒன்றை யாழ் நகரில் நடத்தியது ஆனால் ஊர்வலம் நடத்தப்பட்ட அன்றே பாடசாலை அதிபர்கள் கல்விமான்கள் பெற்றோர் சிந்திக்கும் மனப்பான்மை உள்ள மாணவர்கள் கூடி தீர்மானத்தை எதிர்த்ததினால் அந்தப் பைஸ்கரிப்பு தீர்மானம் கைவிடப்பட்டது.
அதேபோன்று குமரப்பா புலேந்திரன் மற்றும் 12 பேரின் மரணத்தையும் சரியான ராஜதந்திர முறையில் புலிகள் இயக்கத்தினால் தவிர்த்திருக்க முடியும்.
இலங்கை பிரச்சனையில் இந்தியா தடை இடுவதற்கான காரணத்தை நன்கு புரிந்து செயல்பட்டிருந்தால் எமது மக்களுக்கு ஏற்பட்ட உயிர் உடமைகளின் இழப்புகள் பெருமளவு தவிர்த்து தமிழர் பிரச்சினைக்கு நீதியான தீர்வு ஒன்றினை காணும் சூழ்நிலையை முன்பே ஏற்படுத்தி இருக்கலாம் ஆனால் புலிகள் ஆயுதத்தின் மேல் கொண்ட அளவுக்கதிகமான நம்பிக்கையும் செயல்பாடும் தமிழ் மக்களுக்கு சொல்வனா துன்பங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளது
இத்தனை இழப்புகளுக்கு பின்பு தமிழ் மக்கள் பெற்றதுதான் என்ன?
அரசியல் அதிகார பரவலாக்கள் என்ற பதம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்ற போதிலும் அதற்கான வரையறை இன்னும் தெளிவாக வகுக்கப்படவில்லை அரசியல் யாப்பின் 13 ஆம் திருத்த சட்டமூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு சட்ட வடிவம் கொடுத்தது ஆனால் இலங்கை இந்தியா ஒப்பந்த மூலம் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமைகள் எவையும் 13வது சட்டத்தின் மூலம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
பகுதி ஐந்து தொடரும்
No comments:
Post a Comment