பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 13 July 2023

பகுதி 7 சிதைந்தசித்தாந்தங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 13 July 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம்


தமிழ் புதிய புலிகள் T N T யாழ்குடா நாட்டில் கல்வியன்காட்டில் செட்டி என அழைக்கப்பட்ட தனபால சிங்கத்தின் தலைமையில் ஒரு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த சில பிரமுகர்கலால் சில தனிநபர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து இவர்கள் மறைந்த முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆலாள சுந்தரத்தின் ஆலோசனையின் பெயரில் தமிழ் புதிய புலிகள் என ஒரு குழு நிலையில் செயல்பட்டனர்

குட்டிமணி தங்கத்துரை குழுவுடன் இந்தியாவில் சேர்ந்து இருந்த பிரபாகரன் 1974 ஆம் ஆண்டு இந்த குழு இலங்கையில் செயல்படாமல் இந்தியாவில் இருந்து செயல்படுவதாக குற்றச்சாட்டி அவர்களுடன் முரண்பட்ட நிலையில் இலங்கை வந்து செட்டியின் தலைமையிலான 

தமிழ் புதிய புலிகளில் தன்னை இணைத்துக் கொண்டார் தமிழ் புதிய புலிகள் குழுவில் ரமேஷ் சிவராஜா இன்பம் கண்ணாடி பத்மநாதன் பற்குண ராஜா கலாபதி யாழ் கிருபாகரன் பிரபாகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.



இக்குழுவின் T N T நடவடிக்கைகள்


. 1974 இல் இவர்களின் முதல் நடவடிக்கையாக யாழ் தெல்லிப்பளை கூட்டுறவு பண்டகசாலை கோஆப்பரேட்டிவ் பணம் 97 ஆயிரம் ரூபாய் கொள்ளை. இதில் செட்டி சிவராசா ரமேஷ் பிரபாகரன் ஆகியோர் பங்கு பெற்றனர்.


1975 இல் யார் மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் பக்குன ராஜா கலாபதி கிருபாகரன் பிரபாகரன் ஆகியோர் பங்கு பெற்றனர்


1976 இல் புத்தூர் வங்கியிலும் ரூபா 10 லட்சம் கொள்ளை இதில் கராட்டி ஜெயவேலு செல்லக்கிளி ( செட்டியின் தம்பி) உதயகுமார் பிரபாகரன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இந்த நடவடிக்கைகள் செட்டி தலைமையில் மேற்படி குழு இருந்தபோது நடைபெற்றது இவர் தனிப்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு தனது சொந்த நலனையும் கவனித்து வந்தார் இதன் பின்னர் 1981 இல் குட்டி மணியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பெரிய சோதி, சின்ன சோதி ஆகியோரம் 1983 ஜூலை வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை குட்டிமணி ஆகியோரும் 1986 புலிகளை இயக்கத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட telo இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபா ரத்தினமும் தனி ஒரு குழுவாக செயல்பட்டு வந்தனர் பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)என்ற பெயரில் செயல்படலாகினர்


இக்குழுவினரின் நடவடிக்கைகள்

1976 அருளம்பழம் முன்னே நாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் கொலை முயற்சி

1976 கு வினோதன் கொலை முயற்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்

1977 தாடி தங்க ராஜா கொலை

1978 போலீஸ் அதிகாரி பத்மநாபன் கொலை

1978 போலீஸ் அதிகாரி குருசாமி கொலை இவர் சன் சோனி கமிஷனில் அரசுக்கு ஆதரவாக சாட்சி கூறியவர்

1978 ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி குமார் கொலை


ஞானசேகரன் (பரந்தன் ராஜன் இஎன்டிஎல்எப்) மாணிக்கம் தாசன் (புளொட்) ஆகியோர் குமரபுரம் குரூப் என இயங்கினர்.


இந்த நேரம் கொழும்பில் அரச நில அளவையார் ஆக கடமையாற்றிக் கொண்டிருந்த உமா மகேஸ்வரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராகவும் பணிபுரிந்தார். அப்போது அவர் சகல தமிழ் குழுக்களுடனும் தொடர்புகளை கொண்டு இருந்தார். அக்காலத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது ரெலோ இயக்க ஆரம்ப கர்த்தாவான தங்கதுரை அவர்கள் உமா மகேஸ்வரனின் யாழ் வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் குழுக்கள் இடையே இவ்வாறானசெயல்பாட்டில் காணப்பட்ட ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

செட்டி தலைமையிலான தமிழ் புதிய புலிகளை TNT ஓர் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டுப்பாட்டுடனும் கொள்கை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்று நோக்கமும் ஆக்கவும் அந்த இயக்கத்தில் உமாமகேஸ்வரன் அவர்கள் இணைந்து கொண்ட பின்பே ஏற்பட்டது அதன் காரணமாகவே தமிழ் புதிய புலிகள் என்ற பெயர் உமா மகேஸ்வரனால் தமிழிலே விடுதலைப் புலிகள் என பெயர் மாற்றம் ஏற்பட்டதுடன் அதன் முதல்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு செயல்பட்டார்.


இணையத்தில் இருந்து தமிழ் இளைஞர்கள் பலர் அவியக்கத்துடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கென வன்னிப்பிரதேச காடுகளில் விவசாய பண்ணைகள் அமைக்கப்பட்டன. அங்கே அவர்கள் ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். தமிழ் புதிய குளியல் ஒன்றும் நடத்திய முன்னாள் யாழ் மாநகர மேயரும் மான அல்பிரெட் துறையப்பா கொலை உட்பட பல கொலைகளைப் பற்றி புலனாய்வு செய்ய குற்ற புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியாக இருந்த பாஸ்தியாம்பிள்ளை முயன்று தமிழீழவிடுதலைப் புலிகள் பற்றிய பல உண்மைகளே சேகரித்து இருந்தார் அத்துடன் வன்னி பிராந்தியத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற முகாம் ஒன்றையும் கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய முயன்ற போது அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற மூன்று புலி சாரும் கொல்லப்பட்டனர் இதுவே அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒரு அமைக்கப்பட்ட தாக்குதலாக அமைந்தது. இதை தொடர்ந்து அரசு இயந்திரத்துக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்தது அவ்விதமான தாக்குதல்களில் இரத்மலானை விமான நிலையத்தில் அவரோ விமானம் குண்டு வைத்து தாக்கப்பட்டது முக்கியமானதாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அரசுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதன்முறையாக உரிமை கோரப்பட்டது. சி ஏ டி அதிகாரி பஸ்த்தியான பிள்ளையின் கொலையைத் தொடர்ந்தேயாகும். இதன் உரிமை கோரும் பிரசுரம் தமிழர் விடுதலை கூட்டணியின் மகளிர் பேரவை கிளைச் செயலாளராக இருந்த ஊர்மிளா தேவி அவர்களால் அரசாங்க எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற காரியாலயத்தில் தட்டச்சு செய்யப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உமா மகேஸ்வரனால் கையொப்பமிடப்பட்டு வெளியானது. ஊர்மிளாதேவிக்கு உதவியாக அரசாங்கம் எழுதவினைஞாரக கொழும்பில் கடமையாற்றிய செல்வி திலகவதியும் பங்காற்றினார் தமிழ் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் பங்கு பற்றிய முதல் பெண்மணிகள்  இவர்கள்.

ஆவார்.

தமிழ் ஈழப் போராட்டத்திற்கு பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தொடர்புகளை முதன்முதலாக ஏற்படுத்திக் கொடுத்தவர் ஈரோஸ் இயக்கத்தின்  ஸ்தாபகரான ரத்ன சபாபதி அவர்களே பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இவர் கொண்டிருந்த தொடர்பால் புலிகள் இயக்கத்துக்கும் லெபனானில் பயிற்சி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதே பயன்படுத்தி புலிகள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் உமாமேஸ்வரன் விச்வேஸ்வரன் ஆகிய இருவரும் 1976 ஆம் ஆண்டு லெபுனான் சென்று பயிற்சி பெற்றனர்.

1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திரு அமிர்தலிங்கம் புலிகளின் சார்பில் உமா மாமேஸ்வரன் பிரபாகரன் நா ராஜா விச்வேஸ்வரன் ஐயர் ஆகியோரும் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையின் போது புலிகளுக்கு நிதி ஆய்த உதவி பயிற்சி ஆகியவற்றுக்கு தாம் உதவுவதாக திரு அமிர்தலிங்கம் ஏற்றுக் கொண்டதை எடுத்து TULF ஒரு வெகுஜன அமைப்பாகவும்LTTE தலைமறைவாகவும் வேலை செய்வதென்ன முடிவெடுத்தனர் ஆனால் திரு அமிர்தலிங்கம் தான் ஒப்புக்கொண்டபடி எந்த உதவிகளும் செய்யவில்லை

தமிழர் விடுதலை கூட்டணியின் வேட்பாளராக பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனா ரத்தினம் பின்னர் கட்சி மாறி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்ததே தொடர்ந்து அவர் மேல் 1978 ஜனவரி 28 இல் கொலை முயற்சி நடந்தது இதில் நேரடியாக பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் பங்கு கொண்டனர் அதனை தொடர்ந்து உமா மாமேஸ்வரன் அவர்கள் தலைமறைவானார்கள்.


தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவராக இருந்து கொண்டு கொழும்பில்அரசு ஊழியராகவும் உமாமாமேஸ்வரன் கடமையாற்றியதால் அவரால் வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது இவருக்கு கியூபா தூதரகத்துடன் ஏற்பட்ட தொடர்புகள் இருந்ததால் 1978ல் கியூபாவில் நடைபெற்ற இளைஞர் மாணவர் பேரவையின் 11 வது மாநாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஐவரை அனுப்பும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார் இந்த மாநாட்டில் மாவை சேனாதிராஜா காசி ஆனந்தன் ஆகியோர் இளைஞர் பேரவை சார்பிலும் சிங்க நயம் சாந்தன் லோகேஸ்வரன் ஆகிய மூவரும் புலிகள் சார்பிலும் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ஈழப் போராட்டம் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது கியூபா மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் சார்பில் அறிக்கைகள் உமா மகேஸ்வரன் கையொப்பத்துடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது கனக ரத்னம் எம்பி கொலை முயற்சியை அடுத்து அரசினால் இவரால் கியூபா மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.



பகுதி 8 தொடரும்



                  



logoblog

Thanks for reading பகுதி 7 சிதைந்தசித்தாந்தங்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment