பகுதி ஒன்று
சமூக விஞ்ஞான கலை இலக்கிய கழகம் ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட சிதைந்தசித்தாந்தங்கள் இன்னும் சிறு வெளியீட்டின் பிடிஎஃப் தொகுப்பு கிடைத்தது. இதில் பல குறைகள் இருந்தாலும் பல உண்மைகளும் அடங்கியுள்ளன. புளொட் செயல் அதிபர் பற்றிய செய்திகள் உண்மைகள் மறைத்து எழுதப்பட்டுள்ளது. சந்ததியார் கொலை, புளொட் தோழர்கள் கொலைகள் தொடர்பான எந்த செய்திகளும் இல்லை. சந்ததியர் வெளியிட்ட மொழிபெயர்ப்பு புத்தகமான வங்கம் தந்த பாடம் உமா மகேஸ்வரன் வெளியிட்டதாக இதில் உள்ளது. அதோடு உமா மகேஸ்வரன் லலித் அதுல முதலி தொடர்பு பற்றியும் ஒன்றும் இல்லை. ஆனாலும் இன்று முகநூலில் அரைகுறையாக எமது போராட்டம் பற்றி எழுதுபவர்களுக்கு இதைப் படித்தால் விபரங்கள் புரியும்.
இதே முக புத்தகத்தில் போட சமூக விஞ்ஞான கலை இலக்கிய கழகத்துக்கு நான் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
பதிப்புரை
இன்று இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி தமிழ்ஈழபோராட்டம் பற்றி சரியாக புரிந்து கொள்ளாத நிலையில் பலர் இந்த போராட்டம் பற்றி தமது இஷ்டப்படி விமர்சனம் செய்வதையும் பிரச்சாரம் செய்வதையும் காண முடிகிறது. குறிப்பாக போராளிகள் பலருக்கு இந்தப் போராட்டம்bஎப்போ யாரால் எப்படி ஆரம்பிக்கப்பட்டது இதில் யார் யார் எப்படி தங்களை ஈடுபடுத்தினர் என்பது கூட புரியாத நிலையில் ஆயுதங்கள் கையில் வைத்திருக்கின்றனர். இயக்கத் தலைவர்களும் சரியான போராட்ட வரலாறுகளை தமது போராளிகளுக்கு விளக்க தவறிவிட்டனர் ஒவ்வொரு போராளியும் தான் சார்ந்த இயக்க தலைவர்கள் தான் போராட்டத்தை முதலில் ஆரம்பித்ததாக எண்ணுகின்றனர்.
தமிழ் தேசிய இனப் போராட்டத்தில் இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய மிதவாத கட்சிகளின் பங்களிப்புகளை போராளிகள் சிறிது கூட தெரிந்து கொள்ளாத இருக்கின்றனர். குறிப்பாக எஸ் கே வி செல்வநாயகம் அவர்களை பற்றி கூட அறியாத நிலையில் பல போராளிகள் இன்று உள்ளனர்.
எனவே தமிழீழ விடுதலை இயக்கங்கள் போராட்டங்கள் பற்றிய உண்மை வரலாறு தெரிவது எதிர்கால சந்ததிக்கு ஒரு கட்டாய தேவை அதை தெரியாமல் எந்த இளைஞனும் சரியான பார்வை பெற மாட்டான் இதனால் எதிர்காலத்தில் தமிழ் சமுதாயம் இல்லாமல் போகும் அளவு தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலை தொடரும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க உண்மை வரலாறு நமக்குத் தேவை அதற்கு சிறிய கையேடாக போராளிகள் வரலாற்றின் சில விபரங்களை இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம் இதேபோன்று பல வெளியீடுகள் அனுபவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டு உண்மை நிலை உலகறிய செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் அவா.
ஆசிரியர் குழு
சமூக விஞ்ஞான கலை இலக்கிய கழகம்
ஏப்ரல் 1990
சிதைந்தசித்தாந்தங்கள்
இந்திய படை வெளியேறிவிட்டது அன்று இந்திய படைக்கு மகர தோரணம் கட்டி கும்பம் வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றவர்கள் இன்று இந்திய படையின் வெளியேற்றத்துக்கு நமது இடைவிடாத போராட்டமே காரணம் என மார்பு தட்டி மக்களை தம் பின்னால் திரளுமாறு வேண்டுகிறார்கள். மறுபக்கம் இலங்கை ஜனாதிபதி அவர்கள் தமது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவே இந்தியப் படை வெளியேறியது எனக் கூறி சிங்கள பௌத்த மக்களின் தன்னாதிக்கத்தை மீண்டும் நிறைவேற்றிய பெரும் தலைவன் தானே என கூறுகிறார் இந்திய தரப்பிலோ இந்திய படை இலங்கையை விட்டு நிறைவான உணர்வுடன் பயணமாகிறது மோதலில் ஈடுபட்ட எல்லா சக்திகளையும் ஒரு ஐக்கிய இலங்கைக்குள் அமைதியான ஜனநாயக தீர்வுகளைநாடும் வகையில திருப்பி விடப்பட்டுள்ளது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய உறைவிடம் என அங்கீகரிக்கப்பட்டு வடகிழக்கில் ஒரு புதிய மாகாணம் நடைமுறைக்கு வந்துள்ளது என இலங்கைக்கான இந்திய தூதர் கூறியுள்ளார் இந்திய பாதுகாப்பு இணை அமைச்சரோ தனது இராணுவம் நெருக்கத்தால் புலிகளை ஜனநாயக செயல்பாடுகளுக்கு இந்திய படை கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார்
இதில் இந்தியாவின் கூற்றே பெரும்பாலும் சரியென கொள்ளலாம் என்று தமிழ் ஈழம் என்ற கோரிக்கை எல்லோரும் கைவிடப்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் இன பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்பது எல்லோராலும் வெவ்வேறு விதமான வார்த்தை ஜாலங்களினால் முன் வைக்கப்படுகிறது ஆனால் தமிழ் மக்களோ தான் 40 ஆண்டுகளுக்கு முன் எதனை பெற்றிட வேண்டும் எனக் கோரி நின்றார்களோ அதே நிலையில் தான் இருக்கிறார்கள்.
40 ஆண்டுகால அகிம்சை வழி போராட்டம் ஆயுதப் போராட்டம் அயல் நாடுகளின் ஆயுதம் மற்றும் ஆத்மீக ஆதரவுடன் நடத்தப்பட்ட போராட்டம் அகில உலக ரீதியாக ஐக்கிய நாடுகள் சபையிலே தமிழீழக் குரல் எழுப்பியது உட்பட நடைபெற்ற பிரச்சார போராட்டங்கள் எல்லாம் பெற்று தந்தது எதுவுமே இல்லை மீண்டும் நாம் போராட்ட ஆரம்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே பொருந்தும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடத்தப்பட்ட பிரச்சார வேலைகளின் காரணமாகவும் ஆயுத குழுக்களின் செயல்பாடுகளை அடக்குவதற்காகவும் 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்ற தீர்வு முன்வைக்கப்பட்டு இறந்து பிறந்த குழந்தையாக புதைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட 9 வருட கால பொருத்தமற்றஆயுதப் போராட்டம் அந்நியப்படைகளான மோசட் கினி மினி தென்னாப்பிரிக்க கூலிப்படையினர் ஆகியோரின் வருகைக்கும் இறுதியில் வடமாராட்சி அழிவுக்கும் அதனை தொடர்ந்து இந்திய ராணுவ தலையிட்டுக்கும் வழி வகுத்தது இதன் காரணமாக அதிகாரம் அற்ற வடக்கு கிழக்கு மாகாணசபை என்று ஒன்று உரு பெற்றது. ஒரு வருடமாகியும் அதன் உருவம் தெளிவாக தென்படாத நிலையில் அதை உருவாக்கியவர்களும் இல்லை அதற்கு உருவம் கொடுக்க முயன்றவர்களும் நாட்டில் இன்று இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.
தமிழ் மக்களோ தான் வேண்டி நின்ற சமத்துவ வாழ்வினை பெறவில்லை மாறாக அதனை யாரோ பெற்றுத் தருவார்கள் அந்த நாளை வேண்டி காத்திருப்போம் என்று நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே உரிமை வேண்டி நின்ற தமிழ் மக்கள் எதிர்கொண்ட அழிவுகள் கணக்கில் அடங்காது உடலாலும் பொருளாலும் உளரீதியாலும் தமிழ் மக்கள் இழப்புகளை எதிர் நோக்கினர் இது அத்தனையும் வீர சுதந்திரம் வேண்டி நின்றதற்கான வீரப்பரிசு ஆனால் இத்தனை இழப்புகளுக்கு பின்னும் வீர சுதந்திரம் கிட்டியதா என்றால் அதுதான் இல்லை.
பகுதி இரண்டு தொடரும்
No comments:
Post a Comment